.

Pages

Thursday, January 8, 2015

பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு !

பட்டுக்கோட்டையில் வர்த்தக நோக்குடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி நகராட்சி அலுவலர்களை கலெக்டர் சுப்பையன் கேட்டுக்கொண்டார்.

பட்டுக்கோட்டை நகர வளர்ச்சி பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் சுப்பையன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பொன்விழாஆண்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை காசாங்குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொட ர்ந்து நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கழிப்பறைக்கான இடத்தை பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் வசதிக் காக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழையும் பகுதியின் எதிரில் கழிப்பறையை கட்ட வேண்டும், கழிப்பறை நவீன வசதியுடன் கூடிய கழிப்பறையாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டை மல்டி லெவல் கார் ஸ்டாண்டாக மாற்றுவதற்கான உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது நடைபாதை கடைகள் இயங்கி வரும் நாடிமுத்துநகர், காந்தி பூங்கா சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நகர வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்தும், நகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின் வாரிய அலுவலர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சாந்தாங்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நவீன வடிவமைப்பில் வர்த்தக நோக்குடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நகரின் பிரதான சாலையாக பெரியதெரு இருப்பதால் தெருவில் அமைந்துள்ள நடைபாதைக்கு பாதசாரிகள் மட்டும் நடந்து செல் லும் வகையில் கைப்பிடிகள் அமைத்து மேம்படுத்தவும் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மின்கம்பங்களை மாற்றி அமைக்க மின்சாரவாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆர்டிஓ அரங்கநாதன், தாசில்தார் பாஸ்கரன், நக ராட்சி தலைவர் ஜவஹர் பாபு, துணைத் தலைவர் பாரதி, நகராட்சி ஆணையர் அட்சயா, பொறியாளர் ரங்க ராசு, நகரமைப்பு அலுவலர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர், மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரவாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
*File photo

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    எல்லா ஊரும் நல்லாத்தான் இருக்குது, இந்த அதிரையை நினைத்தால் ‎தான் சங்கடமாக இருக்கின்றது. ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.