இந்த நிலையில் ராதிகா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றது. கர்ப்பிணி ராதிகாவை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தது.
இதனை டிரைவர் மணிவேல் ஓட்டி வந்தார். மருத்துவ உதவியாளர் நீலகண்டன் ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சை அளித்து வந்தார். ராதிகாவுடன் அவரது கணவர் செந்தில் குமார், நாத்தனார்கள் தேவி, மணிமேகலை ஆகியோர் வந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆம்புலன்ஸ் தஞ்சை அருகே உள்ள துறையூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் ராதிகா மற்றும் மருத்துவ உதவியாளர் நீலகண்டன் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் ராதிகாவின் வயிற்றில் உள்ள குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தையும் வயிற்றிலேயே இறந்தது தெரியவந்தது.
மேலும் செந்தில்குமார், அவரது சகோதரிகள் தேவி, மணிமேகலை, ஆம்புலன்ஸ் டிரைவர் மணிவேல் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:மாலை மலர்

வெறி மோசமான செய்தி, 108 ஆம்புலன்சில் தகுதி உள்ள ஓட்டுனர்களை அமர்த்துவது நல்லது.
ReplyDeleteபிறந்தவர்கள் இறப்பதும், பிறக்கப்போகும் உயிர்கள் மாய்க்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது.
Migavum kodia sambavam....
ReplyDelete