அதிரையில் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பெல்லாம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த
“நாடியம்மன் கேஸ் ஏஜென்சி” மூலம் அதிரையர்கள் சமையல் எரிவாயுவை பெற்று வந்தனர். ஒரு
சிறிய வேலையாக இருந்தாலும் பட்டுக்கோட்டைக்கு படை எடுக்க வேண்டி இருந்தது. இது
அதிரையர்களுக்கு ஒரு பெரிய மலைப்பாக இருந்து வந்தது.
கடந்த சிலவருடங்களிலிருந்து அதிரையர்கள், அதிரையிலேயே இயங்கும் “பாலு இன்டானே
கேஸ் ஏஜென்சி” மூலம் சமையல் எரிவாயுகளை பெற்று வருகின்றனர்.
இந்த நிறுவனம் ஷிஃபா மருத்துவமனையைத் தாண்டி நேராக சென்றால், அங்கே வலது புறம்
ஒரு “டாஸ்மார்க் ஒயின் ஷாப்” இருக்கும், இடது புறம் நிலத்தடி நீரை எடுத்து
குடிநீராக்கும் தனியார் தொழில் நிறுவனமும் அதற்கு சற்று முன்பு இடது புறத்திலேயே இந்த
கேஸ் நிறுவனம் இருக்கின்றது.
இது ஓரிரு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தாலும், ஊருக்கு அப்பால் உள்ளது, இது
கூட பொதுமக்களுக்கு போய் வர சங்கடமாக இருக்கின்றது. கேஸ் சேமிப்பு கிடவுன் வேண்டுமானால்
ஊருக்கு அப்பால் இருக்கட்டும், ஆனால் மக்களுக்காக இயங்கும் அலுவலகம் ஊருக்கு
நடுவில் இருக்க வேண்டும் என்பது அதிரை பொதுமக்களின் ஒற்று மொத்த விருப்பமாக
இருக்கின்றது. இருந்தாலும் மக்கள் சிரமப்பட்டு போய்வருவது உறுதி.
இது வெல்லாம் இப்படி இருக்க............................................!!!!!??????
அதிரையில் இருந்து மேற்கே இ.சி.ஆர். சாலையில் இராஜாமடம் புதுப்பட்டினம் இந்த
இரண்டு ஊர்களுக்கு இடையில் கொள்ளுக்காடு என்ற கிராமம் ஒன்று இருக்கின்றது.
அந்த கிராமத்தில் புதியதாக ஒரு கேஸ் ஏஜென்சி உருவாகி இருக்கின்றது. அவர்கள்,
தங்களுடைய (Capacity) கொள்ளளவை நிரப்புவதற்கு
போதிய கஸ்டமர்கள் இல்லை. இதன் காரணத்தினால் அதிரையில் இயங்கும் பாலு இன்டானே கேஸ்
நிறுவனத்தின் அனுமதியோடு தோராயமாக ஆயிரம் (1000)
கஸ்டமர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு இருப்பதாகவும், இனிமேல் நீங்கள் எங்கள்
பக்கம் தான் என்றும் என்ற விபரத்தை அவர்களே (கொள்ளுக்கடு புதிய ஏஜென்சி) எஸ்.எம்.எஸ்.
மூலம் இழுத்துக் கொண்டு போன கஸ்டமர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதில் “புதுமனைத் தெருவில் ஒரு சில பகுதி, நடுத்தெரு, நெசவு காரத் தெரு,
கீழத்தெரு, மேலத் தெரு, பிலால் நகர், எம் எஸ் எம் நகர், கடைத்தெரு ஒரு சில
பகுதிகள்”, இப்படி பல பகுதிகளில் பல கஸ்டமர்களை கஷ்டப்படாமல்
பெற்றிருப்பது கஸ்டமர்களின் கஷ்டகாலம்.
ஒரே நிறுவனம் “இன்டானே கேஸ்” ஆனால் வேறு பட்ட இடங்கள். “அதிராம்பட்டினம்-கொள்ளுக்கடு”
ஒரு இடம் விட்டு மறு இடத்திற்கு கஸ்டமர்களை மாற்றும் முன் கஸ்டமர்களுக்கு
தெரிவிக்க வேண்டும், கஸ்டமர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும், கஸ்டமர்கள்
விருப்பப்பட்டால் ஒழிய மற்றபடி மாற்ற முடியாது.
ஆனால் கஸ்டமர்களுக்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமலும், ஒப்புதல்
இல்லாமலும், இப்படி தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இருப்பது மோசமான செயல்களில்
இதுவும் ஒன்று.
கஸ்டமர்கள் என்ன? ஆட்டுக் குட்டியா, ஹை! ஹை!! ன்னு ஒட்டிக்கிட்டு போக.
ஆறறிவு படைத்த மனிதன் மிருகங்களை எப்படி மதிக்கின்றானோ!? அதைவிட அதிகமாக
மதிக்கணும் கஸ்டமர்களை (மனிதனை)
இனிமேல் ஒரு சிறிய வேலையாக இருந்தாலும், கஸ்டமர்கள் கொள்ளுக்காட்டுக்கு
படையெடுக்க வேண்டும், நேரம், பணம், விரயம் ஆவதோடு பல சிரமங்களுக்கு உள்ளாக வேண்டி
இருக்கின்றது.
இப்படி ஒரு செயல் நடந்ததற்கு அதிரையில் இயங்கும் “பாலு இன்டானே கேஸ் நிறுவனம்” தகுந்த பதில் அளிக்க
வேண்டும்.
மாற்றப்பட்ட கஸ்டமர்களின் பெயர்களை தர வேண்டும்.
மேலும் மாற்றின கஸ்டமர்களை திரும்ப பெற்று, பழையபடி ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இது நடக்குமா! நிறைவேறுமா?
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.