இன்று காலை பட்டுக்கோட்டையில் மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழர் கூட்டமைப்பு அமைப்புகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை மணிக்கூண்டிலிருந்து ஊர்வலமாக சென்ற மது எதிர்ப்பாளர்கள் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆரப்பட்டதில் மமக அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மமக மாவட்ட பொருளாளர் கபார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இளந்தென்றல், மதிமுக நகர செயலாளர் செந்தில் குமார், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லாஹ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
நிருபர் ராஜா, பட்டுக்கோட்டை, அதிரை தமீம்
செய்தி மற்றும் படங்கள்:தமுமுக - மதுக்கூர்
இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் தமிழகத்தில் மது விலக்கு அமல் படுத்த முடியாதநிலையே இருந்துள்ளது .குடிப்பவர்கள் வழக்குகளை சந்தித்து அபராதம் கட்டினார்கள்; பணக்காரர்கள் பர்மிட் பெற்று பயன்படுத்தினர் .பின்ன மதுவிலக்கு நீக்கப்பட்டு சுதந்திரமாக மகிச்சியுடன் மகிழ்ந்தனர் .இப்போது எல்லோரும் மது அருந்த விருப்பப்படி அனுமதி உள்ளது .அரசியலுக்கு இதனை ஆயுதமாக்க பலரை ஒருங்கிணைத்து வன்முறை செய்து குழப்பம் உண்டாக்கி பயனடைய முயல்வோரும் பயன்பெற்று ஆதரவு பேரங்களும் திரைமறைவு திட்டங்களும் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் .வன்முறை அராஜகம் இவை மதுவைவிட மிக கொடியது மனசாட்சி இல்லா சந்தர்பவாதம்.
ReplyDeleteபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலில் .... குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா.
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா.
மஸ்தான் கனி என்ன சொல்ல வர்ரீங்க....மதுவிலக்கு பற்றி இப்ப அரசியல் பேசலாம் ,ஆனால் நமக்கு இஸ்லாம் முன்பே (மது)அதன் தீயதை சொல்லி ஹராம் என்று தடைவிதித்துள்ளது.
ReplyDeleteதமிழ்நாட்டில், ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுவதற்கு எதிர்கட்சிகளுக்கு தற்போது மதுக்கடை விஷயம் சிக்கியிருக்கிறது. அதனைக் கைகளில் எடுத்துக்கொண்டு, எதிர்கட்சிகள் ஆங்காங்கே தறிகெட்ட முறையில் செயல்பட்டும், அப்பாவி மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் தூண்டிவிட்டு இப்போது மாநிலமெங்கும் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வந்துவிட்டதல்லவா? அதனாலேயே இவர்கள் அனைவரும் தற்போது வாரிச்சுருட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்கட்சிகள் அனைவரும் உண்மையிலேயே நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டிருப்பவர்களாக இருந்தால், மக்களுக்கு நன்மை செய்பவர்களாக இருந்தால், ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும்.
Deleteஅதாவது தங்களது கட்சி உறுப்பினர்களோ, தங்களது கட்சித்தலைவர்களோ இனிமேல் ஒருபோதும் குடிக்கவே மாட்டோம். தங்களது தலைவர்களோ, தொண்டர்களோ எவராவது குடித்தால் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம். ஒருபோதும் சாராயம் காய்ச்சும் ஆலைகளை தங்களது கட்சியினர் யாரும் இயக்க மாட்டோம், அப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் கட்சி நிதியையும் ஏற்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்? முதலில், நாட்டு மக்களை நாசம் செய்யும் சாராயத்தின் ஏகபோகத்தை நிறுத்திட இவர்கள் அனைவரும் அவ்வாறு சத்தியப் பிரமாணமாக சபதமேற்றுவிட்டு, உத்தமராக இருந்துவிட்டு, பின்னர் ஆளுங்கட்சிக்கு எதிராக மதுவிலக்கு ஆதரவு போராட்டத்தை மக்களிடம் முன்வைக்க வேண்டும். அப்படியா இங்கு நடந்துகொண்டிருக்கிறது. இல்லவே இல்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்வது, எப்படியாவது மக்களை ஏமாற்றும் வேலைகளை டிசைன் டிசைனாக அரங்கேற்றுவது, என எதிர்கட்சிகள் தினம் தினம் ஒவ்வொரு நாடகமாக மக்களின் முன்னே அரங்கேற்றிக் காட்டி, அரசியல் பந்தயத்தில் தங்களது குதிரை ஜெயிப்பதற்காக, இன்று ஒன்றுமறியாத அப்பாவி மக்களை பலிகடாவாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மதத்தோடு அரசியல் கலந்து பேச வேண்டாம் , அரசியல் ஒரு சாக்கடை என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். நடப்பது எல்லாம் நாடகமே.