இந்த முகாமில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலதிக தகவல் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்புவோர்
அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அவர்களை 9043140142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி சார்பில் இரத்த தானம் முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஃப்ளக்ஸ் பேனர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது...
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ வகை தானங்கள் செய்திருப்போம். அவையெல்லாம் அடுத்தவரின் மனக்காலையையோ, பசியையோ போக்கும். ஆனால் நாம் கொடுக்கும் ரத்ததானம் ஒருவரின் உயிரைக் காக்கும். ரத்த தானத்தை சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுத்தோம் என்றால், அதைவிட பெரிய தானம் இவ்வுலகில் இல்லை என்பதே என் கருத்து.
ReplyDeleteஅதற்காக முயற்சி மேற்கொள்ளும் ரெட்கிராஸ் அமைப்பினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆவும்.