நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் தலைமையுரை நிகழ்த்தினார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் சேக் அப்துல் காதர், ஆங்கில துறை தலைவர் முஹம்மது முகைதீன், இணை பேராசிரியர் எம் சிக்கந்தர் பாஷா, முனைவர் எஸ்.அபூதாஹிர், முனைவர் ஓ சாதிக், எஸ். சந்தானம், அலுவலக கண்காணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றி அறிமுகத்தையும், தற்போது தான் செய்துவரும் பணிகள் பற்றியும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் ஆகியவற்றை பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
முன்னதாக முன்னாள் மாணவர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் உதவி பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி முடிவில் முன்னாள் மாணவர் தவாரிஸ் அன்சாரி நன்றி கூறினார்.
17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் இதே தினத்தில் ( 08th August ) முன்னாள் IT மாணவர்கள் இணைந்து நடத்த வேண்டும் என்பதே முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.
வாவ்.... ஸ்வீட் ட்ரீம்ஸ்...!!
ReplyDeleteபடிப்பிற்கு பின், 17 ஆண்டுகளில் சாதித்தவை, சாதிக்க முயல்பவி, வெற்றிகள், தோல்விகள் பற்றி பகிர்ந்து இருந்தால் உபயோகமாக இருந்திருக்குமே .....
ReplyDelete