தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தலைமை வகித்து பேசியது:
திமுக தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பின்னாளில் மக்கள் மத்தியில் புரட்சியாக மாறியது. அதேபோல் தற்போது திமுக தொடங்கியுள்ள மதுவிலக்குப் போராட்டமும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலர் மு. காந்தி, கழக உயர்நிலை செயல்பாட்டுக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மாநில தேர்தல் பணிக் குழு உறுப்பினர் எல். கணேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜாமாணிக்கம், ராமச்சந்திரன், அண்ணாதுரை, ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் அதிரையிலிருந்து பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், பழஞ்சூர் கே. செல்வம், அன்சர்கான், இன்பநாதன், கோடி முதலி, பகவதி, முத்துராமன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தல் வரை தான். அதன் பிறகு அந்த தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்த கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் போராட்டத்தை தொடரும். திமுக ஜெயித்தால் இதே மது பிரச்சினையை வைத்து அதிமுக போராடும். அதிமுக மீண்டும் ஜெயித்து ஆட்சியை அமைத்தால் மற்ற கட்சிகள் ஒன்று இந்த போராட்டத்தை தொடரும் அல்லது வேறு போராட்டங்களில் தங்கள் கவனத்தை செலுத்தும்.
ReplyDeleteகூட்டத்திற்கு வந்தவர்கள் எத்தனைப்பேர் மது அருந்தாதவர்கள்? மது ஆலைகளை வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகள் தானே ஆளாளுக்கு மதுவுக்கு எதிராக பேசுகிறார்களே தவிர யாரும் தான் நடத்தும் கிளப், மதுபானக் கடை, ஆலை மூடச் சொல்ல மனசு தயாரில்லை,
இந்த விஷயத்துக்காக சசி பெருமாள் என்ற ஒரு நல்ல மனிதர் போராடி இறந்து போனார். அதை வைத்து இந்த ஈன பிறவி அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களுக்கு லாபம் என்று கணக்கு போட்டு ஆளாளுக்கு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டு போராடுகின்றனர். அந்த மாமனிதரின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் இந்த அரசியல் கட்சிகளை என்னவென்பது? இவர்களின் ஆட்சியில் ஏன் டாஸ்மாக் மூடவில்லை???