.

Pages

Friday, January 22, 2016

2016 ஆம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடுகளின் பட்டியல் !

உலகில் 2016 ஆம் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலை உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடாக ஜேர்மனி தேர்வாகியுள்ளது. இந்த ஆய்வின் பொருட்டு உலக பொருளாதார மையம் உலகின் 60 நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது.

இதில் நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், வணிகம், வாழ்க்கை தரம், பாரம்பரியம் மற்றும் பொருளாதார செல்வாக்கு என 24 தகுதிகளை கொண்டு இந்த பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இத்தகவல்களை சேகரிக்க 16,200க்கும் அதிகமான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும், அதில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் வாழத்தகுந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள், முதலிடம் ஜெர்மனி, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்.

இந்த பட்டியலில் இந்தியா 22 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து போர்ச்சுகல், ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

2 comments:

  1. தலைப்பை சரிபார்க்கவும்

    ReplyDelete
  2. தலைப்பை சரிபார்க்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.