முத்துப்பேட்டையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பகம் மற்றும் சைல்ட் லைன் ஆகியோர் காவல் துறையுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 முறை 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பக்துவச்சலம், கனகசபை, தலைமை காவலர் பன்னீர்செல்வம், குழந்தைகள் பாதுகாப்பக கல உதவியாளர் மகேஷ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் அபிராமி ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்பொழுது கடை மற்றும் ஹோட்டல்களில் வேலைப்பார்த்த காரைத்திடல், கனேஷ் மகன் விஸ்வநாத்(17), கிளார்வெளி அய்யாநாதன் மகன் ராஜா(17), பைப்பாஸ் சாலை மாரியப்பன் மகன் முத்து(16), மருதங்கவெளி சுப்பிரமணியன் மகன் சுதாகர்(15) ஆகியோர் மீட்கப்பட்டு முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பிறகு பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அறிவுரை வழங்கி மீட்கப்பட்ட சிறுவர் தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.
செய்தி: 'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.