காலத்திற்கேற்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளை கொண்டு மக்களுக்கு நன்மை ஏவியும், தீமை குறித்து எச்சரித்தும் பிளக்ஸ் போர்டுகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றும் வகையில் காலேஜ் முன்புறம், பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கம் மற்றும் தக்வா பள்ளி அருகிலும் ஆரம்பமாக வைக்கப்பட உள்ளன.
இந்த நன்மையான காரியத்தில் பங்கு கொள்ள விரும்பும் தனி நபர்களும், ஸ்பான்ஷர் செய்ய விரும்பும் வர்த்தக பிரமுகர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
ஒரு ஃபிளக்ஸ் 400 ரூபாய் வீதம் 3 ஃபிளக்ஸ்களுக்கு 1200 ரூபாய் மட்டுமே.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க: கமாலுதீன் 9543577794
தகவல்:அதிரை அமீன்

யாருடைய போட்டோ போட்டுருக்கிறாங்க? இவர்கள் அதிரையர்களா? காலேஜ் முக்கத்தில் போர்டை வைத்து மார்க்கத்தை விளம்பரபடுத்துவதை விட தஞ்சை கலக்டரிடம் மனு கொடுக்கலாம் அதில் மார்க்கத்திற்கு புறம்பாக சிகை அலங்காரம் செய்துகொள்பவர்கள் ADT பகுதிக்குள் நடமாடக்கூடாதென்றும் மீறுபவர்கள் அதிரை காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுவில் குறிப்பிடலாம்.
ReplyDeleteஇப்போர்டுக்கு ஸ்பான்சர் ஆக விரும்புவர்கள் தங்கள் வீட்டிலோ அல்லது குடும்பத்திலோ அல்லது முஹல்லாவிலோ மேற்குறுப்பிட்ட விதிமுறைகள் மீராதவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல் " உபதேசம் ஊருக்கு மட்டும் தான் " என்றாகிவிடும். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.