அதிரையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். எழிலரசன் (43). அதிரை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கப்படுத்தான்காடு பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் எழிலரசனை வழிமறித்து உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த எழிலரசன் பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.