தஞ்சை மாவட்ட பொதுமக்களை 'புகையில்லா பண்டிகை' கொண்டாட மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பையன் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் “போகிப்பண்டிகை” கொண்டாடுகிறோம். “பழையன கழிதல்” என்பது இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்துவது பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். தற்சமயம் போகியன்று மக்கள் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களையும் சேர்த்து எரிக்கையில் (Dioxin) நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுக் காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. எனவே, தேவையற்ற கழிவுகளை எரித்திடவோ தெருக்களில் வீசி எறியவோ கூடாது.
மேலும், தேவையற்ற கழிவுகள் மற்றும் பொருட்களை உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாலும் மறு பயன்பாட்டிற்குரியவை, மறுசுழற்சிக்குரியவைகள், மக்கக்கூடியவைகள், மறுசுழற்சியற்றைவைகள் (நச்சுத்தன்மையற்றவைகள்) போன்ற பொருட்களை மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவால் சேகரிக்கப்படவுள்ளதாலும் தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு பொது இடங்களில் வீசப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் சிக்கி கழிவுநீர் செல்லவிடாமல் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. எனவே, இதுபோன்ற செயல்களால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன் மண்வளமும் பாதிப்படைகிறது.
எனவே, பொங்கல் திருநாளை “புகையில்லா பண்டிகை” யாக கொண்டாடிட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும், கழிவுப்பொருட்களை கீழ்காணும் முறைகளில் வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உள்ளாட்சி பணியாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், சுற்றுச்சூழல் குழு மூலம் சேகரிக்கும்போது தரம் பிரித்து வழங்கிட வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் தெருக்களில் பிளாஸ்டிக் பைகளை வீசி எறிவதை தவிர்க்க வேண்டும்.
பயனற்ற டயர்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
குப்பையை குறைப்போம் மாசினை தவிர்ப்போம் - Reduce.
குப்பையை மறுசுழற்சி செய்வோம், கழிவினை காசாக்வோம் - Recycle.
குப்பையை மறுபயன்பாடு செய்வோம் மண்ணைக் காப்போம் - Reuse
போகிப் பண்டிகைக்கு டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும்
செயற்கைப் பொருட்களை எரிக்காமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவோம்.
போகிப் பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும். அன்று குப்பையை எரிப்பதை ஒழித்து, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும் மாசு இல்லாமலும் கொண்டாடுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ! என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.