இதையொட்டி நேற்று [ 05-01-2016 ] தவ்ஹீத் பள்ளியில் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் எம்.கே.எம் ஜமால் முஹம்மது தலைமை வகித்தார். கிளை பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் கல்லூரி முதல்வருமாகிய அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' மற்றும் இதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
பின்னர், 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் அவசியத்தை விளக்கி கூறி அதிரையின் பிரதான இடங்களில் தெருமுனை பிராசார கூட்டங்கள் நடத்துவது, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விளக்கி கூறுவது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, மாநாட்டிற்கு அதிரையிலிருந்து அதிகமானோரை வாகனங்களில் அழைத்து செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் TNTJ அதிரை கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.








Insha Allah .........
ReplyDeleteகல்யாண வீட்டில் கலாட்டா பார்த்த மக்களுக்கு இப்போ மௌத்தான வீட்டிலும் கலாட்டா அரங்கேறியுள்ளது கும்பகோண பக்கத்தில் ஆவூர் என்ற ஊரில்; கேள்வி பட்டிருக்கலாம் அதாவது தவ்கீது சகோதரரின் தந்தை காலமாகிறார் அவரை தவ்கீது முறையில் நல்லடக்கம் செய்ய மகன் விருப்பப்படுகிறார் ஆனால் ஜமாத்தார்கள் தாங்கள் முறையில் தான் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று கூற; இரு பிரிவினரிடையே மோதலை தடுக்க பெரும் காவல்துறை அதிகாரிகள் வரவளைககப்பட்டு பாதுகாப்பு போடப்படுகிறது; இறுதியில் பெண்களே ஜனாஸாவை எடுத்து வந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது; இது முறை தானா? மாற்றுமதத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?
ReplyDeleteமாநகராட்சியில் மாநாடு நடத்தினால் அதில் வைக்கப்படும் கோரிக்கை ஆளும் அரசுக்கு எட்டும் என்பார்கள் அல்லது தங்களது பலம் என்னவென்பதை நிரூபிக்க கூடு கூட்டம் என்பார்கள் அதனால தேர்தலில் பேரம் பேசலாம்.. ஒற்றுமை கேள்வி குறியாக இருக்கும்பொழுது ஷிர்க் ஒரு !!!! தான். மோதலை தடுக்க நல்லது நடக்கட்டும்.