இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமை வகித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி, திரு.எம்.ரெத்தினசாமி, திரு.இரா.துரைக்கண்ணு, மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.அமுதாராணிரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாநில அமைச்சர் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியினை துவக்கி வைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்கள்.
பின்னர், இப்பேரணியை கொடியசைத்து மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் துவக்கி வைத்தார்கள்.
இப்பேரணியில் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவியர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் மாணவ மாணவியர்கள் தலைக்கவசம், உயிர்கவசம், மித வேகம், மிக நன்று, வேகம், விவேகம் அல்ல, படியில் பயணம், நொடியில் மரணம், சிவப்பு விளக்கை மதித்திடு, இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு, சாலையில் சாகசங்கள் வேண்டாமே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்று பேரணியில் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பால்வளத் தலைவர் திரு.ஆர்.காந்தி, நிக்சல்சன் வங்கித் தலைவர் அறிவுடைநம்பி, மாநகராட்சி உறுப்பினர்கள் திரு.சரவணன், திரு.புண்ணியமூர்த்தி, தஞ்சை ரமேஷ், துணை போக்குவரத்து ஆணையர் திரு.முனியராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ராஜ்குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகர், செந்தில்நாதன், மாணிக்கம், ராஜசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ரெ.மதியழகன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



100 ல் போய் 108 ல் வருவதை விட
ReplyDelete40 ல் போய் நலமாய் வருவது நன்று.