மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் காவேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 104 பயனாளிகளுக்கு, தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பொங்கல் 2016 பரிசுத் தொகுப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படும்.
அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய நிலைக் கடைகள் மூலமாக சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு மற்றும் ரொக்கம் ரூ.100 ஆகியவை வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான 6,25,914 குடும்ப அட்டைதாரர்களும், பொங்கள் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் 2016 பரிசுத் தொகுப்பினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 300 பேர் வீதம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி. அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதரன், காவேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், துணைத் தலைவர் வேங்கை கணேசன், மேலாண் இயக்குநர் முகமது ரபி, மாவட்ட பதிவாளர் முத்துகுமார், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணை தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் ஏராளமான கூட்டுறவு சங்க அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


இப்போதெல்லாம் யார் வீட்டில் ( சில கிராமங்களை தவிர..) அதிகாலையில் பொங்கல் வைக்கிறார்கள்..தமிழக அரசு சொல்கிறது... 1.9 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று... 10000 ஏன் 10 லட்சம் குடும்பங்கள் பொங்கல் வைக்கும் என்று வைத்து கொண்டால் கூட, இது தேவை இல்லாத செலவு...அரசு கொடுக்கும் 100 ரூபாயை எதிர்பார்த்து அவர்கள் இல்லை.ஒரு ஆண்டுக்கு 319 கோடி என்றால் ஒரு ஆட்சி முடிவதற்குள் 1595 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீண்... இந்த தொகையை வேறு நல்ல பல திட்டங்கள் தொடங்க பயன்படுத்தலாமே.
ReplyDelete100 ருபாய் சரி அதோடு 2 அடிக்கரும்பு ! நுனிக்கரும்பு வேண்டாம்; அடிக்கரும்பு வேண்டும்' என கேட்டால் என்ன செய்வார்கள்? ஒரு குடும்பத்துக்கு ஒரு கரும்பு வழங்குவது, ஓரளவு எளிதாக இருக்கும் எப்படியோ கஜானாவை காளிபன்னுங்க.