ஒரத்தநாடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு வட்டத்தில் புதியதாக தொடங்க உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் 5-01-2016 முதல் தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேலநிலைப் பள்ளி வளாகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 18-01-16 அன்று நடைபெற உள்ளது. வேலைவாய்ப்புடன் கூடிய இந்த தொழிற் பயிற்சியில் சேர்ந்து அனைவரும் பயன் பெற கேட்டுக் கொள்கிறேன்.
ஒரத்தநாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவுகள் சேருவதற்கான பின் வரும் தகுதிகளான...
பற்ற வைப்பவர் தொழிற்பிரிவில் (1 வருடப் படிப்பிற்கு) (Welder) 8ம் வகுப்பு தேர்ச்சியும், பொருத்துநர் (Fitter) (2 வருடப் படிப்பிற்கு) 10ம் வகுப்பு தேர்ச்சியும், மின்சார பணியாளர் (Electrician) (2வருடம் படிப்பிற்கு) 10ம் வகுப்பு தேர்ச்சியும்,
கட்டிட பட வரைவாளர் (Draftman Civil) (2 வருடப்படிப்பிற்கு) 10ம் வகுப்பு தேர்ச்சியும், கம்மியர் குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்துதல் ( Mech-R, A/c ) (2 வருட படிப்பிற்கு) 10ம் வகுப்பும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு வழங்கும் சலுகைகளான மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500/-ம், கட்டணமில்லா பேருந்து சலுகையும், விலையில்லா மிதிவண்டியும், விலையில்லா மடிகணினியும், விலையில்லா பாடபுத்தகமும், விலையில்லா 2 செட் சீருடைகளும், விலையில்லா காலணிகளும் வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில் விருப்பம் உள்ள இளைஞர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.