மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை துபாய் மண்டலத்தின் சமூக நல்லிணக்க அரங்க கூட்டம் நேற்று துபாயில் நடந்தது.
கூட்டத்திற்கு அமீரக மண்டல ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமை வகித்தார். பஹ்ரைன் மண்டல ஒருங்கினைப்பாளர் ஜான் முஹம்மது, அதிரை அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் நடந்த அரங்கத்திற்கு மறைந்த இஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் பெயர் சூட்டப்பட்டது. அரங்க நுழைவாயிலுக்கு மறைந்த முதுபெரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி பரதன் பெயர் சூட்டப்பட்டது.
முன்னதாக அப்துல் ரசீது கிராத் ஓதி கூட்டத்தை தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து துபாய் மண்டல செயலாளர் யூசுப்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமீமுன் அன்சாரி 'இந்தியாவின் சமூக நல்லிணக்கம்' குறித்து எழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த ராசுதீன் உரையாற்றினார்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் தமீம் அன்சாரி சளைக்காமல் பதிலளித்து பேசினார். கூட்ட முடிவில் மண்டல பொருளாளர் அப்துல் ரஜாக் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துபாய் மண்டல பொறுப்பாளர்கள் செய்தனர்.
செய்தி உதவி: அதிரை அஸ்ரப் அலி
செய்தி மற்றும் படங்கள்:
அமீரகத்திலிருந்து நூவண்ணா

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.