தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலை பெட்ரோல் நிலையம் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிப்படைந்தது.
அதிரை - பட்டுக்கோட்டை சாலை பெட்ரோல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பயங்கராமாக மோதியது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக முறிந்து சாலையோரத்தில் விழுந்தது. இதனால் அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனரக பேருந்துகள் மாற்றுப் பாதையில் சென்றன.
இதனையடுத்து தகவலரிந்த மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து கம்பிகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் போக்குவரத்து சீரானது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுகைப்படங்களை பார்க்குபோதும், இவ்வழியே செல்லும் மின் கம்பிகள் குறைந்த (440-V) மின் அழுத்தத்தைக் கொண்டதாக இருக்கின்றது, இதுவே உயர் (11000-V) மின் அழுத்தத்தைக் கொண்ட மின் கம்பிகளாக இருந்திருந்தால், விபரீந்தங்கள் பல நடந்து இருக்கலாம், காரணம், பொதுமக்கள் பேரூந்துகள் என பரபரப்பாக இருக்கும் சாலை இது.
இதுபோல் ஊரின் பல பக்கங்களிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் இருக்கின்றன. அவைகளை கால தாமதமின்றி மின் வாரியம் மாற்றி அமைத்துத்தரனும்.
K.M.A. Jamal Mohamed.
President – PKT Taluk.
National Consumer Protection Service Centre.
(Non-Political Service Centre)
State Executive Member
Adirampattinam-614701.