.

Pages

Friday, September 30, 2016

அதிரையில் திமுகவினர் பேரணியாக சென்று வேட்பு மனுக்கள் தாக்கல் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-30
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் போட்டியிடும் வார்டுகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலர் அன்சர்கான் இன்று அறிவித்தார்.

இதையடுத்து இன்று மதியம் திமுக மற்றும் காங்கிரஸ், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம் வரை சென்றனர். பின்னர் திமுக வேட்பாளர்கள், அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை அளித்தனர்.

இதில் திமுகவை சேர்ந்த லலிதா ( வயது 55 ) க/பெ. தண்டபாணி 1 வது வார்டுக்கும், இராம. குணசேகரன் ( வயது 56 ) , த/பெ. இராமச்சந்திரன் 2 வது வார்டுக்கும், சண்முக வேல் ( வயது 43 ) த/பெ. சாமிக்கண்ணு 3 வது வார்டுக்கும், பாலமுருகன் ( வயது 41 ) த/பெ. ஜெயராமன் 4 வது வார்டுக்கும், செய்யது புஹாரி ( வயது 43 ), த/பெ. பிச்சைகனி தண்டையார் 8 வது வார்டுக்கும், பசூல்கான் ( வயது 41 ), த/பெ. குல் முஹம்மது 9 வது வார்டுக்கும், உம்மல் மர்ஜான் ( வயது 48 ) க/பெ. அன்சர்கான் 11 வது வார்டுக்கும், செய்யது முஹம்மது ( வயது 56 ) த/பெ. நூர் முஹம்மது 12 வது வார்டுக்கும், இஸ்மாயில் நாச்சியா ( வயது 34 ) க/பெ. முஹம்மது சரீப் 14 வது வார்டுக்கும், கன்சுல் மஹ்ரிபா ( வயது 46 ) க/பெ. ஜாஹிர் உசேன் 15 வது வார்டுக்கும், நிலோபர் ( வயது 43 ) க/பெ. என்.ஏ. முகமது யூசுப் 16 வது வார்டுக்கும், முஹம்மது சேக்தாவூது ( வயது 40 ), த/பெ. நெய்னா முஹம்மது 18 வது வார்டுக்கும், சந்திரா ( வயது 45 ) க/பெ. பழனிவேல் 20 வது வார்டுக்கும், சித்தி மர்ஜூக்கா ( வயது 37 ) க/பெ. முஹம்மது இப்ராஹீம் 21 வது வார்டுக்கும் மனுக்களை அளித்தனர். 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை

தொடக்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் இராமச்சந்திரன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே செல்வம், அதிரை பேரூர் திமுக அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது முகைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் ஷேக் அப்துல்லாஹ்,  மணிச்சுடர் சாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது, ஜாகிர் ஹுசைன் ஆகியோரும், தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்ஷா, மமக நகர செயலாளர் எஸ்.ஏ. இதிரிஸ் அஹமது, தமுமுக-மமக  பொருளாளர் செய்யது முகமது புஹாரி, துணை செயலாளர் எம் ஆர்.ஹாலிது உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், தமுமுக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

அதிரை பேரூராட்சி 10,13,17,19 ஆகிய வார்டுகளுக்கு, மமக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-30
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மனித நேய மக்கள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 10,13,17, 19 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் மமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் தெஷிமா ( வயது 38 ) க/பெ. தமீம் அன்சாரி, வார்டு எண் 10 க்கும், செளதா ( வயது 36 ) க/பெ. அஹமது ஹாஜா, வார்டு எண் 13 க்கும், ரபீக்கா, ( வயது 37 ) க/பெ. முஹம்மது சலீம், வார்டு எண் 17 க்கும், சமீமா நஸ்ரின், ( வயது 33 ) க/பெ. சாகுல்ஹமீது, வார்டு எண் 19 க்கும் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை அதிரை பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் கே செல்வம், துணைச்செயலர் அன்சர்கான், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது முகைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் ஷேக் அப்துல்லாஹ்,  மணிச்சுடர் சாகுல் ஹமீது, ஜமால் முஹம்மது, ஜாகிர் ஹுசைன் ஆகியோரும், தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்ஷா, மமக நகர செயலாளர் எஸ்.ஏ. இதிரிஸ் அஹமது, துணை செயலாளர் எம் ஆர்.ஹாலிது, தமுமுக-மமக  பொருளாளர் செய்யது முகமதுபுஹாரி, நசுருதீன், கனி, ராஜிக் அஹமது, சலீம், நெய்னா முகமது, அப்துல் ஜப்பார், இப்ராஹிம்சா உள்ளிட்ட  தமுமுக, மமக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
 

அதிராம்பட்டினத்தில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் காணொளி ( வீடியோ )

அதிராம்பட்டினம், செப்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் கடந்த மாதம் ஆகஸ்ட் அன்று பவித்ரா திருமண மஹாலில் நடைபெற்றது.

அதிரை தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் செயலர் ஜமீல் எம். சாலிகு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். முஹம்மது இப்ராஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புற்றுநோய் ஏற்படக்காரணம் என்ன?, இதன் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் ? இவற்றை தவிர்ப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கிக் கூறினார்.

முகாம் முடிவில் புற்றுநோய் குறித்து பார்வையாளர்களில் 3 பேர் எழுப்பிய சிறந்த கேள்விகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த முகாமில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? (காணொளி காட்சிகள் )

அதிரை பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! ( முழு விவரம் )

அதிராம்பட்டினம், செப்-30
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் போட்டியிடும் வார்டுகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலர் அன்சர்கான் அறிவித்தார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:
(1 வது வார்டு) லலிதா ( வயது 55 ) க/பெ. தண்டபாணி
(2 வது வார்டு ) இராம. குணசேகரன் ( வயது 56 ) , த/பெ. இராமச்சந்திரன்
(3 வது வார்டு) சண்முக வேல் ( வயது 43 ) த/பெ. சாமிக்கண்ணு
(4 வது வார்டு) பாலமுருகன் ( வயது 41 ) த/பெ. ஜெயராமன்
(5 வது வார்டு) போட்டியில்லை
(6 வது வார்டு)  போட்டியில்லை
(7 வது வார்டு) போட்டியில்லை
(8 வது வார்டு) செய்யது புஹாரி ( வயது 43 ), த/பெ. பிச்சைகனி தண்டையார்
(9 வது வார்டு) பசூல்கான் ( வயது 41 ), த/பெ. குல் முஹம்மது
(10 வது வார்டு) தீன் நிஷா ( வயது 43 ), க/பெ. இக்பால்
(11 வது வார்டு) உம்மல் மர்ஜான் ( வயது 48 ) க/பெ. அன்சர்கான்
(12 வது வார்டு) செய்யது முஹம்மது ( வயது 56 ) த/பெ. நூர் முஹம்மது
(13 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(14 வது வார்டு) இஸ்மாயில் நாச்சியா ( வயது 34 ) க/பெ. முஹம்மது சரீப்
(15 வது வார்டு)  கன்சுல் மஹ்ரிபா ( வயது 46 ) க/பெ. ஜாஹிர் உசேன்
(16 வது வார்டு) நிலோபர் ( வயது 43 ) க/பெ. என்.ஏ. முகமது யூசுப்
(17 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(18 வது வார்டு) முஹம்மது சேக்தாவூது ( வயது 40 ), த/பெ. நெய்னா முஹம்மது
(19 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(20 வது வார்டு) சந்திரா ( வயது 45 ) க/பெ. பழனிவேல்
(21 வது வார்டு) சித்தி மர்ஜூக்கா ( வயது 37 ) க/பெ. முஹம்மது இப்ராஹீம்

இவர்கள் அனைவரும் இன்று (30-09-2016 ) மதியம் வேட்பு மனுக்களை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

துபாயில் அக்.1 முதல் 8 வரை ஜீடெக்ஸ் வர்த்தக கண்காட்சி !

அதிரை நியூஸ்: துபாய், செப்-30
இந்த வருட இலையுதிர்கால ஜீடெக்ஸ் நுகர்வோர் (Autumn Gitex Shoppers) மின்னனு கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1 தேதி துவங்கி அக்டோபர் 8 ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே (MENA) மிகப்பெரும் சில்லறை வர்த்தக மின்னனு பொருட்காட்சியாக திகழும் இதில் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகள், டேப்லட்டுகள், HD டிவிக்கள், கையணிகள் (Wearables), ஸ்மார்ட் வாட்சுகள், டிஜிட்டல் கேமராக்கள், மின் விளையாட்டு சாதனங்கள், லேட்டஸ்ட் கேட்ஜெட்டுகள் (Gadgets) என பல்லாயிரக்கணக்கான தயாரிப்புகள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்படவுள்ளன.

இந்த கண்காட்சியில் கலந்துவோர்கள் உட்பட நுகர்வோர்கள் என அனைவருக்கும் எதிர்பாரா வியப்பூட்டும் பரிசுகளும் (Surprise Prizes) காத்திருக்கின்றன. தினமும் காலை 11 முதல் இரவு 11 மணிவரை துபை வேல்டு டிரேட் சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நுழைவு கட்டணம் 35 திர்ஹம் ஆனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் அன்று வருவோருக்கு 30 திர்ஹம் மட்டுமே. டிக்கெட்டுகள் ஜீடெக்ஸ் அரங்க நுழைவாயிலிலும், ZOOM அவுட்லெட்களிலும், மெட்ரோ ஸ்டேஷன்களிலும் கிடைக்கும். டிராபிக் நெரிசலை தவிர்க்க துபை வேல்டு டிரேட் சென்டர் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி பொடிநடையாக மிகச்சில நிமிடங்களில் உள்ளே வரலாம்.

50 பேருக்கு மேற்பட்ட குழுவாய் வரும் மாணவர்களுக்கு டிக்கெட் விலை 10 திர்ஹம் மட்டுமே. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பெற்றோரின் பாதுகாப்புடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

உலகின் முன்னனி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளர்களும், அதிகாரபூர்வ விநியோகஸ்தர்களும் மட்டுமே பங்குபெறும் இந்த மின்னனு கண்காட்சியில் கடந்த வருடம் சாதனை நிகழ்வாக 218722 பார்வையாளர்களும் 279 மில்லியன் திர்ஹத்திற்கு சில்லறை வர்த்தகமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: நம்ம ஊரான்

அமீரகத்தில் அக்.1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம் !

அதிரை நியூஸ்: செப்-30
கடந்த ஓர் ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து வளைகுடா நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன, மேலும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்ற மாதம் சில காசுகளை விலையேற்றிய அமீரகம் வரும் அக்டோபர் மாதத்திற்கான விலையேற்றம் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி லிட்டர் ஒன்றுக்கு கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,

சூப்பர் 98 – 1.75 திர்ஹத்திலிருந்து 1.81 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

சூப்பர் 95 – 1.64 திர்ஹத்திலிருந்து 1.70 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

ஈ பிளஸ் 91 – 1.57 திர்ஹத்திலிருந்து 1.63 திர்ஹம் - ஏற்றம் 6 காசுகள்

டீசல் - 1.72 திர்ஹத்திலிருந்து 1.76 திர்ஹம் - ஏற்றம் 4 காசுகள்

புதன் அன்று நடைபெற்ற ஒபெக் நாடுகளின் (OPEC - Organisation of Petroleum Exporting Countries) முடிவின்படி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததை தொடர்ந்து பேரலுக்கு சுமார் 5 சதவிகிதம் உயர்வு கண்டது அதாவது பேரல் 46.80 டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய் 48 டாலராக சற்றே உயர்வு பெற்றது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மதுக்கூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! ( முழு விவரம் )

மதுக்கூர், செப்-30
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் மதுக்கூர் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மதுக்கூர் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 15 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
 


அதிரை பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ! ( முழு விவரம் )

அதிராம்பட்டினம், செப்-30
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 21 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:


Thursday, September 29, 2016

அதிரை பேரூராட்சி மமக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ! ( முழு விவரம் )

அதிராம்பட்டினம், செப்-29
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மனித நேய மக்கள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில் 10,13,17, 19 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்துள்ளார்.

மமக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
தெஷிமா ( வயது 38 ) க/பெ. தமீம் அன்சாரி, வார்டு எண்: 10
செளதா ( வயது 36 ) க/பெ. அஹமது ஹாஜா, வார்டு எண்: 13
ரபீக்கா, ( வயது 37 ) க/பெ. முஹம்மது சலீம், வார்டு எண்: 17
சமீமா நஸ்ரின், ( வயது 33 ) க/பெ. சாகுல்ஹமீது, வார்டு எண்: 19

இவர்கள் அனைவரும் நாளை ( 30-09-2016 ) பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

பட்டுக்கோட்டை, செப்-29
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 33 வார்டுகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 

தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆய்வு ! ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் (29.09.2016) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு  வாக்கு எண்ணிக்கை ராஜா சரபோஜி அரசினர் கலைகல்லூரியிலும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜாஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சியும், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் :
தஞ்சாவூர்  தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியிலும், பூதலூர் ஸ்ரீசிவசாமி அய்யர் மேல் நிலைப்பள்ளியிலும், திருவையாறு சீனிவாசராவ் மேல் நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசினர் பெண்கள் மகளிர் கல்லூரியிலும், திருவிடைமருதூர் டி.ஏ.மேல் நிலைப்பள்ளயிலும், திருப்பனந்தாள் குமரகுருபர மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், அம்மாப்பேட்டை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,  பேராவூரணி புனவாசல் தூய ஆரோக்கிய அன்னை மேல் நிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்:
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்;டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை,  ஆகிய 9 பேரூராட்சிகளுக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,

பேராவூரணி, பெருமகளுர், அதிராம்பட்டிணம், ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, தாராசுரம், பாபநாசம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் கும்பகோணம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ராஜா சரபோஜி கலைகல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் நகராட்சி கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் போதிய இட வசதி உள்ளதா என்றும், மின் இணைப்பு, மின்விசிறி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள்  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.ஜி.நிர்மலா, வட்டாட்சியர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

அதிரை பேரூராட்சி 15,18 வது வார்டுகளில் போட்டியிட 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் !

அதிராம்பட்டினம், செப்-29
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

இதையொட்டி, வேட்பு மனுக்கள் பெறுவது கடந்த ( 26-09-2016 ) அன்று முதல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். பிரதான அரசியல் கட்சிகள் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளிப்பதில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அதிரை பேரூராட்சி 18 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேல நெயக்காரத் தெருவை சேர்ந்த அஹமது பஷிருல்லா மகன் நூர் முஹம்மது ( வயது 47 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வழங்கினார்.

அதேபோல், அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் போட்டியிட சுயேட்சையாக விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேலநெயக்காரத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகள் சிராஜுநிஷா ( வயது 22 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். 

அமீரகத்தில் மீண்டும் தலைதூக்கும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் !

அதிரை நியூஸ்: துபாய், செப்-29
அமீரகத்தில் மீண்டும் போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் புதிய இரைகளை நோக்கி தங்கள் வலையை வீசுவதை கல்ஃப் நியூஸின் News Xpress புலனாய்வு குழு வெளிப்படுத்தியுள்ளது, இவர்கள் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டும் இதுபோன்ற ஸ்டிங் ஆபரேசன் நடத்தி இத்தகைய மோசடிகளை வெளிப்படுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பழைய உத்தியை மீண்டும் கையிலெடுத்துள்ள போலி நிறுவனங்கள் முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.
இந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

சிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

மேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அபூதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எதிஹாத் விமானம் !

அதிரை நியூஸ்: அபூதாபி, செப்-29
நேற்று புதன் பகல் 12.06 மணியளவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு 329 பயணிகளுடன் புறப்பட்ட EY450 என்ற எண்ணுடைய போயிங் - 777 வடிவ விமானம் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் புறப்பட்ட 32 வது நிமிடத்தில் மீண்டும் அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக இறக்கப்பட்டது.

விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அவசரகால நிலையை கையாளுதல் குறித்த சிறப்பு தொடர் பயிற்சிகளால் விமானமும் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என எதிஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் சிட்னி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் பகல் 12.50 வரை விமான நிலையம் மூடப்பட்டதுடன் அந்த நேரத்தில் தரையிறங்கவிருந்த ஒரு விமானம் ஷார்ஜாவிற்கும் மற்றொரு விமானம் அபுதாபியின் அல் பத்தீன் விமான நிலையத்திற்கும் திருப்பிவிடப்பட்டன.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

உலகளாவிய முஸ்லீம் பயணிகளுக்கு ஏற்ற ஹோட்டல்களை தேர்வு செய்ய உதவும் நிறுவனம் !

அதிரை நியூஸ்: செப்-29
நவீனம், கலாச்சாரம், உலகமயமாக்கல் போன்ற அலங்கார சொற்களால் அசிங்கப்படுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் முஸ்லீம்கள் முஸ்லீம்களாகவே வாழ தங்களுடைய சூழலை அமைத்துக் கொள்வதென்பது மிகக்கடினமான ஆனால் மறுமையில் பயனளிக்கக்கூடிய சோதனையே.

இன்றைய நவீன உலக தங்கும் விடுதிகள் (Hotels) யாவும் ஆபாசத்தையும், மனிதர்களுக்கு கேடு உண்டாக்கும் உணவுகளையும், புத்தி மழுங்கச் செய்யும் பானங்களையுமே தங்களின் சிறம்பம்சங்களாக கொண்டு கூவிக்கூவி அழைக்கின்ற வேளையில், தூய முஸ்லீம்களாக வாழ விளைவோரும் இத்தகைய கேடுகெட்ட கலாச்சாரப் பின்னனி கொண்ட இடங்களையே வேறுவழி தெரியாமல் தேர்வு செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆனாலும் இவ்வுலகில் "Muslim Friendly" என சிலாகிக்கப்படும் முஸ்லீம்களுக்கேற்ற ஹோட்டல்களும் இருக்கின்ற என்பதை அறியத்தருவதுடன் அதற்கான ஆன்லைன் சேவையை TripFez எனும் பெயரில் வழங்கும் மலேஷியவைச் சேர்ந்த Lagisatu Travel Sdn Bhd நிறுவனம் 2013 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை BBC செய்தித்தளம் தெரியப்படுத்தியுள்ளது.

Muslim Friendly ஹோட்டல்களை இனங்கண்டு நமக்கு தெரிவிக்க முயற்சிக்கும் அதேவேளை அதை உறுதி செய்து கொள்ளும் வேலையை நம்மிடமே தள்ளிவிட்டு எத்தகைய பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாமல் இந்நிறுவனம் கைவிரித்தாலும் முஸ்லீம்களுக்கு உதவும் நோக்கில் தொடர்புடைய இணைய இணைப்புகள் (Links), ஆலோசணைகள் Suggestions), பதிவு செய்து தரும் சேவைகள் (Booking Facilities) என ஒரடியாவது முன்னெடுத்து வைத்திருப்பதை கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும்.

இதுபோன்ற Muslim Friendly சேவைகள் குறித்த தகவல்களை தன்னார்வலர்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் உள்ளூர், மாநிலம், உள்நாடு, வெளிநாடு என எங்கெங்கும் பரவ வேண்டும்.

Source: Msn Lifestyle
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, September 28, 2016

விவசாயம் பண்ணுங்க ! கரும்பு தின்ன கூலி தரும் துபாய் !!

அதிரை நியூஸ்: துபாய், செப்-28
துபாய் இயற்கையில் விவசாயத்திற்கு லாயக்கற்ற பாலைவன பூமி, நீர்வளமோ பருவ மழைகளோ கிடையவே கிடையாது என்பதால் ஆறுகளும் பயாவில்லை அணைக்கட்ட வேண்டிய அவசியமுமில்லை என்பதால் பக்கத்து மாநிலத்துடனோ அல்லது பக்கத்து நாட்டுடனோ தண்ணீர் பங்கீடு பஞ்சாயத்துக்கள் சுத்தமாக இல்லை என்றபோதும் அக்கறையான நீர் மேலாண்மையால் தண்ணீர் பஞ்சம் எனும் சொல்லுக்கே இங்கு வறட்சி தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்...
விவசாயத்தைப் பற்றி இயற்கையாக கவலைப்படத் தேவையில்லாத இந்த நாட்டில், விரல் சொடுக்கினால் உணவு தானியங்களும் காய்கறிகளும் பழங்களும் வந்து குவியும் இந்நாட்டில் இயற்கை விவசாயத்தை, மாடி தோட்ட விவசாயத்தை ஊக்குவிக்கின்றார்கள் என்றால் நம்ப முடிகிறதா!

ஆம்! சுமார் 30 சதவிகிதம் உணவுகள் வீணடிக்கப்படுவதாக கணக்கிடப்படும் துபையில் ஒரு விவசாய பொருளை விளைவிக்க எத்தனை சிரமங்கள் உள்ளன என்பதை அனுபவபூர்வமாகவும் உணரவும், இளைய சமுதாயத்திற்கு விவசாயம் தொடர்பான கல்வியை வழங்கவும், சத்தான, பூச்சி மருந்துகள் இல்லாத உணவை தாமே உற்பத்தி செய்து உண்பதை ஊக்குவிக்கவும் கடந்தாண்டு இத்திட்டம் ஆரம்பம் செய்யப்பட்டு தற்போது இரண்டாவது ஆண்டாக தொடர்கிறது.

இந்த வருடம் பொதுமக்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மையங்கள் என 500க்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு இயற்கை விவசாய முறை, இயற்கை உரம், சொட்டு நீர் பாசனம், விதைக்கும் முறை, செங்குத்தான இடங்களில் பயிர் செய்யும் முறை என அனைத்தை இலவசமாக கற்றுத்தருகின்றனர்.

இந்த இயற்கை விவசாயத்திற்கான இலவச வாராந்திர பயிற்சிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை சனிக்கிழமைகளில் 'டெஸர்ட் க்ரூப் நர்சரி' நிறுவனத்தின் அல் கவானீஜ் விவசாய பண்ணையில் நடைபெறும்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் வெள்ளரி, தக்காளி, கேரட், மிளகாய், புதினா, மல்லி, கீரை வகைகள் மற்றும் மருத்துவ குணமுடைய பயிர்கள் என விளைவித்து அதை இந்தத்திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக ஊடகங்களிலும் முகநூலிலும் அதன் புகைப்படங்களை பதிந்தால் விவசாய நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து அந்த காய்கறிகளை விளைவித்தவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள்.

மேலும், எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அல் ஜபீல் பூங்காவில், பெரிய தொட்டிகளில் அழகு செடிகளை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் பொதுவான இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால் தாராளமாக கீழ்க்காணும் இணைய தளத்தை விஜயம் செய்யலாம்.

Grow Your Food Campaign details

Registration: Through www.growyourfood.ae

Categories: Villas, apartments, schools, offices, special need centres

Workshops: On every Saturday in October and November at Dubai Desert Group’s farm in Al Khawaneej

Contest: From December to February

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தேர்தல் விதி மீறல்: புகார் தெரிவிக்க 24 மணி நேர தொலைபேசி மையம் !

2016 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான
விதி மீறல் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும்
செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  2016 உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன் மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது.  தேர்தல் தொடர்பான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 04362-264825 மற்றும் 04362-264829 ஆகிய  எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

துபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம் !

துபாய்: சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள்வதன்மூலம் உலகின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் விளங்கி வருகிறது. இங்கிருந்து உலகில் உள்ள சுமார் 260 முக்கிய பெருநகரங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 8 மணியளவில் துபாய் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வான்எல்லையில் ஆளில்லா மர்ம விமானம் ஒன்று சுற்றிச்சுற்றி வட்டமிட்டு பறந்து வந்தது.

இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. துபாய் நாட்டில் விமான நிலையங்களுக்குட்பட்ட சுமார் 5 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் தனியாருக்கு சொந்தமான ஆளில்லா விமானங்களை பறக்க விடக்கூடாது. லேசர் ஒளியை பாய்ச்சுவது, கேமராக்களால் படம் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்நாட்டின் அரசு ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும், அத்துமீறலாக சில வேளைகளில் இதுபோல் சில ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்களும் இங்கு நிகழந்தவாறு உள்ளன. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி இதேபோல் பறந்த ஒரு ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் துபாய் சர்வதேச விமான நிலையம் சுமார் 70 நிமிடங்கள் வரை மூடப்பட்டது, நினைவிருக்கலாம்.

நன்றி:மாலை மலர்

துபாயில் ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை தினத்தில் கார் பார்க்கிங் இலவசம் !

அதிரை நியூஸ், துபாய், செப்-28
அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு துவங்குவதையொட்டி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அன்றைய தினம் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் எதுவும் இயங்காது என்றும் தேரா மீன் மார்க்கெட் பார்க்கிங் மற்றும் அனைத்து அடுக்குமாடி பார்க்கிங்குகள் தவிர்த்த பிற இடங்களில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறையையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நேரங்கள்:

மெட்ரோ:
அக்.1 சனிக்கிழமை – ரெட் லைன் - (எக்ஸ்பிரஸ் மெட்ரோ) – அதிகாலை 5.30 மணிக்கு துவங்கி நள்ளிரவு (மறுநாள்) 1 மணிவரை இயங்கும்.

அக்.2 ஞாயிற்றுக்கிழமை – ரெட் லைன் - அதிகாலை 5.30 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.

அக். 1 சனிக்கிழமை – கிரீன் லைன் - அதிகாலை 5.50 மணிக்கு துவங்கி நள்ளிரவு (மறுநாள்) 1 மணிவரை இயங்கும்.

அக்.2 ஞாயிற்றுக்கிழமை – கிரீன் லைன் - அதிகாலை 5.50 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12 மணிவரை இயங்கும்.

துபாய் டிராம்:
தினமும் அதிகாலை 6.30 மணிக்கு துவங்கி நள்ளிரவு (மறுநாள்) 1 மணிவரை இயங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு துவங்கி நள்ளிரவு (மறுநாள்) 1 மணிவரை இயங்கும்.

துபை பஸ்: 
RTA (ஞாயிறு அன்று)

கோல்டு சூக் பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.25 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

அல்குபைபா (பர்துபை) பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

சத்வா பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.57 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

அல் கிஸஸ் பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 4.40 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

அல் கோஸ் இண்டஸ்ட்ரியல் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

ஜெபல் அலி பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

ஏர்போர்ட்டிலிருந்து சத்வா வரை இயங்கும் C01 பேருந்து 24 மணிநேரமும் இயக்கப்படும்.

மேலும், மெட்ரோ இணைப்பு பஸ் நிலையங்களான அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா மால், அபூஹைல், எடிசலாட், துபை மால் - புருஜ் கலீபா ஆகிய நிலையங்களிலிருந்து அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இயங்கும்.

துபையிலிருந்து செல்லும் இன்டர்சிட்டி பஸ்:
அல் குபைபா (பர்துபை) மற்றும் ஷார்ஜா (ஜூபைல் நிலையம்) இடையே 24 மணிநேரமும்,

அல் குபைபா (பர்துபை) நிலையத்திலிருந்து அபுதாபிக்கு அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு (மறுநாள்) 12.25 வரையும்,

யூனியன் ஸ்கொயரிலிருந்து அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு (மறுநாள்) 1.25 வரையும்,

அல் சப்கா நிலையத்திலிருந்து அதிகாலை 6.15 மணிமுதல் நள்ளிரவு 1.30 மணிவரையும்,

டேரா சிட்டி சென்டர் நிலையத்திலிருந்து அதிகாலை 5.35 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

அல் கராமா நிலையத்திலிருந்து அதிகாலை 6.10 மணிமுதல் இரவு 10.15 மணிவரையும்,

அல் அஹ்லி கிளப் நிலையத்திலிருந்து அதிகாலை 6.05 மணிமுதல் இரவு 10.25 மணிவரையும்,

துபைக்கு வரும் இன்டர்சிட்டி பஸ்கள்:
அல் தாவூன் (ஷார்ஜா) நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 மணிவரையும்,

புஜைரா நிலையத்திலிருந்து அதிகாலை 5.50 மணிமுதல் இரவு 9 மணிவரையும்,

அஜ்மான் நிலையத்திலிருந்து அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 11 மணிவரையும்,

ஹட்டா நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையும் துபை போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான RTA பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துகள்:
மரீனா நிலையங்களான மரீனா மால், மரீனா வாக், மரீனா டெர்ரேஸ் மற்றும் மரீனா பிரோமினேட் ஆகிய துறைகளிலிருந்து வாட்டர் பஸ்கள் சனி முதல் வியாழன் வரை காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரையும்,

வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் வாட்டர் பஸ்கள் இயக்கப்படும்.

வாட்டர் டேக்ஸிக்கள் தினமும் காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை இயங்கும்.

அப்ரா போக்குவரத்து (அல் குபைபா, அல் சப்கா, பனியாஸ் மற்றும் துபை ஓல்டு சூக் நிலையங்கள்) சனி முதல் வியாழன் வரை காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரையும்,

வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரையும் இயங்கும்.

புரூஜ் கலீபாவிலிருந்து இயக்கப்படும் புளு அப்ரா (எலக்ட்ரிக் அப்ரா) தினமும் மாலை 6 மணிமுதல் இரவு 11.30 மணிவரையும்,

அல் மம்ஸர் அப்ரா தினமும் மாலை 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும்,

அட்லாண்டிஸ் அப்ரா தினமும் பகல் 1 மணிமுதல் இரவு 9 மணிவரையும்,

அல் ஜத்தாப் (Al Jaddaf) , துபை பெஸ்டிவல் சிட்டிகளில் இயங்கும் குளிரூட்டப்பட்ட (AC) அப்ராக்கள் தினமும் காலை 7 மணிமுதல் நள்ளிரவு 12 வரையும் இயங்கும்.

அல் குபைபா மற்றும் துபை மரீனா நிலையங்களுக்கிடையே தினமும் இயக்கப்படும் துபை பெர்ரி சேவைகள் (Dubai Ferry Services) காலை 11 மணி, பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி மற்றும் 6.30 மணியளவிலும் வழங்கப்படும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் நாள் வாடகை கார்களை இனி மணிக்கணக்கிலும் பெறலாம் !

அதிரை நியூஸ்: துபாய், செப்-28
துபாயில் 'ரென்ட் ஏ கார்' (Rent a Car) என்கிற நாள் வாடகை அடிப்படையில் பெறப்படும் கார்களை 1 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி அல்லது 24 மணிநேரம் பயன்படுத்தினாலும் சரி முழுமையாக நாள் வாடகையே வசூலிக்கப்பட்டு வருகின்றன.

மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டத்தின் அடிப்படையில் 'ரென்ட் ஏ கார்'களை 1 மணிநேரம், 2 மணிநேரம் என அதிகபட்சம் 6 மணிநேரம் வரை வாடகைக்கு எடுக்க முடியும், அதற்கு மேல் முழுநாள் வாடகை தான் என்றாலும் இப்படி மணிக்கணக்கில் எடுக்கப்படும் கார்களை துபைக்குள் மட்டுமே இயக்க முடியும். பிற அமீரகங்களுக்குள் கொண்டு செல்வதை GPS கருவிகள் கண்காணித்து துபை போக்குவரத்துத் துறைக்கும், வாடகை கார் நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தும்.

மேலும், மணிக்கணக்கில் வாடகை கார்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் டேக்ஸி நிறுவனங்களை போல் முறையாக துபை போக்குவரத்துத் துறையிடம் (RTA) தனியார் டேக்ஸி நிறுவனம் என பதிந்து முன்அனுமதி பெற்றே இயக்க முடியும். மேலும் இந்த வகை லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லவும் அனுமதிக்கப்படுவர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபாய் போக்குவரத்து துறை 'நோல்' கார்டுகளை மொபைல் ஆப் வழியாக டாப்அப் செய்யும் வசதி !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-28
துபை போக்குவரத்துத் துறையின் 'நோல் கார்டுகள்' (NOL Card) பஸ், மெட்ரோ, படகு போக்குவரத்துக்கான அனுமதி சீட்டாகவும் பூங்கா நுழைவு கட்டணம் செலுத்தவும் பயன்பட்டுவருகின்றன.

இந்த நோல் கார்டுகளை ரீசார்ஜ் செய்ய தானியங்கி இயந்திரங்களையோ அல்லது டிக்கெட் கவுன்டர்களையோ நாட வேண்டியுள்ளது ஆனால் இனி உங்களுடைய ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து துபை போக்குவரத்து துறையின் 'ஆப்' (Public Transport App) வழியாக உங்களுடைய கிரடிட் கார்டுகளை உபயோகித்து ரீசார்ஜ் எனும் டாப்அப் (Top Up) செய்யலாம்.

மேலும், இந்த ஸ்மார்ட் ஆப் (Smart App) வழியாக ஒரு நோல் கார்டிலிருந்து இன்னொரு நோல் கார்டிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் வசதியும், நோல் கார்டுகளை எங்கெல்லாம் போக்குவரத்திற்கு பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற முழு விபரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் தடை !

அதிராம்பட்டினம், செப்-28
அதிராம்பட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (செப்-29) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 27, 2016

அதிரை ஈசிஆர் சாலை அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் (ஈசிஆர் சாலை) 10 அடி அகலத்திலுள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 66 பேர் வீடு, கடைகள் கட்டியுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை செப். 27-ம் தேதி அகற்றுமாறு பட்டுக்கோட்டை வருவாய்த்துறைக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையில் வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்)  செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தர்மேந்திரா, ராஜகுமாரி,
நில அளவையர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர்.

அப்போது நீர்நிலை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களும், பொதுமக்களும் திரண்டு அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை அளந்து குறியீடு செய்து, கால அவகாசம் தாருங்கள். நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என வாதிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தின் மீது  அடையாள குறியீடு செய்யப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள 66 பேரும் விரைவில் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.