.

Pages

Tuesday, September 27, 2016

சவூதியில் மந்திரிகள் உட்பட அரசு ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் கட்டு!

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்- 27
சவூதியில் பெட்ரோல் விலை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது சவுதி அமைச்சர்களின் சம்பளத்தில் 20 சதவிகிதமும், ஷூரா கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு 15 சதவிகிதமும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் வீடு, கார் மற்றும் பர்னிச்சர்களுக்கான அலவன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் ஆண்டிற்கு போனஸ் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, ஏமன் நாட்டில் போர்முனையில் உள்ள ராணுவத்தினரை தவிர. மேலும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு இனி அரசு வாகனங்கள் மற்றும் டெலிபோன் சலுகைகளும் குறைக்கப்படவுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் அரசின் எந்த ஒப்பந்த வேலைகளுக்கும், ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு தரப்பட மாட்டாது இல்லையேல் ஒப்பந்தமே சில காலத்திற்கு ரத்து செய்யப்பட்டு பணிகள் தள்ளி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வருடாந்திர அரசு பொதுவிடுமுறை தினங்கள் 42ல் இருந்து 36 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் வருடாந்திர விடுமுறையான 60 நாட்களிலும் விடுப்பெடுக்காமல் பணியாற்றினால் அதற்காக சம்பளமோ, அலவன்ஸ்களோ, வாகன வசதிகளோ இனி கிடைக்காது.

Source: Gulf News & Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.