.

Pages

Tuesday, September 20, 2016

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நாளை 21 ந் தேதி கவுன்சிலிங் நிகழ்ச்சி: மணமக்கள் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், செப்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் சமீபத்தில் திருமணம் முடித்த மணமக்கள் மற்றும் மணவிழா காண உள்ள மணமக்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை புதன்கிழமை ( 21-09-2016 ) காலை 10 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரியில் படித்த கையோடு, அல்லது அலுவலகப் பணியின் சுமைகளோடு மணமேடையில் வந்து அமரும் இன்றைய மணமக்களுக்கு, கணவன்-மனைவியின் உரிமைகள் - கடமைகள் என்ன என்பது குறித்தும், இல்லறத்தின் நெளிவு சுளிவுகள், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், உறவுகளின் அருமை ஆகியன குறித்தும், குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துவரும் திடீர் 'தலாக்', அவசர 'குலா' ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

அதிரை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி, உறவு மேம்பட உதவும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைவரின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மணமுடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுவரும் மணமக்கள் மற்றும் புதிதாக மணவிழா காண உள்ள மணமக்கள் அனைவரும் தங்களது பெற்றோருடன் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் நல்ல விஷயம் அணைத்து மணமகன், மணமகள், புதிய தம்பதிகள் தவறாமல் கலந்து பயன் பெற வேண்டும்....

    ReplyDelete
  2. கலியாணம் ஆகி பல வருடங்களை கடந்தாலும் குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகிறது.தலையாய காரணம் விட்டு கொடுத்தல் பரந்த மனம் பொருமை போன்றவை இல்லாமை. எனவே பழைய தம்பதிகளை அல்லது அதிகமான பெண்களும் இதில் கலந்து பயன்பெற ஏற்பாடு செய்யவும்.அதிகப்பிடியான பிரச்சினைகளின் ஆணி வேர் பெண்கள்

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. தேவையான பணி. முக்கியமாக இந்தக் கூட்டத்தில் ஒரே குடும்பத்துக்குள் திருமணம் செய்துகொள்வதன் அறிவியல் பூர்வமான தாக்கம் பற்றியும் சொல்லப்பட வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.