.

Pages

Thursday, September 29, 2016

அதிரை பேரூராட்சி மமக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ! ( முழு விவரம் )

அதிராம்பட்டினம், செப்-29
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மனித நேய மக்கள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. இதில் 10,13,17, 19 ஆகிய 4 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது அறிவித்துள்ளார்.

மமக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
தெஷிமா ( வயது 38 ) க/பெ. தமீம் அன்சாரி, வார்டு எண்: 10
செளதா ( வயது 36 ) க/பெ. அஹமது ஹாஜா, வார்டு எண்: 13
ரபீக்கா, ( வயது 37 ) க/பெ. முஹம்மது சலீம், வார்டு எண்: 17
சமீமா நஸ்ரின், ( வயது 33 ) க/பெ. சாகுல்ஹமீது, வார்டு எண்: 19

இவர்கள் அனைவரும் நாளை ( 30-09-2016 ) பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

1 comment:

  1. அதிராம்பட்டிணம் பேரூராட்சி தமிழகத்தின் தலைசிறந்த பேரூராட்சியாக மாற்றம் காணவேண்டும். சுதந்திரம் அடைந்த பின் தமிழகத்தின் முன்னேறிய ஊர்களில் அதிரையும் ஓன்று. இந்த ஊர் மக்களின் உழைப்பினால் வளர்ச்சியடைந்தது,நாகரீகம் மேம்பட்ட சமுதாயம் உருவானது. பெண்களின் வாழ்க்கை மேம்பட தனக்கென ஓரு தனி வழியை அமைத்துக்கொண்டது. தற்போது அதன் வளர்ச்சியில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது,நவீன காலத்தின் வசதிகள் ஏற்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இனி வரும் உறுப்பினர்கள் இக்குறையை போக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.