.

Pages

Sunday, September 25, 2016

மலேசியாவில் பார்க்கிங் ஸ்பாட்டில் 20 நிமிடங்கள் தனித்து விடப்பட்ட குழந்தை – காரணம் என்ன?

அதிரை நியூஸ்:
மலேசியா, செப்-25
வேடிக்கையான மனிதர்களின் விந்தையான செயல்கள் சில சமயம் குரூரமாக அமைந்துவிடும் அதுபோன்ற ஒரு சம்பவத்தை மலேஷியாவிலிருந்து வெளிவரும் 'தி ஸ்டார் ஆன்லைன்' எனும் பத்திரிக்கை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

மலேஷிய தலைநகர் கோலாலம்பூரின் 'ஜாலான் குச்சாய் லாமா' எனும் பிஸியான வர்த்தக பகுதியில் ஒரு சிறுவன் நெடுநேரமாக பார்க்கிங் பகுதியில் அமர்ந்திருந்ததை கவனித்தவர்கள் குழந்தை பெற்றோரால் தவறவிடப்பட்டு இருக்குமோ! என அனுதாபத்துடன் அனுகினர்.

ஆனால், குழந்தை அளித்த பதில் தான் அனைவரையும் தூக்கிவாரிப் போட்டது, அந்த குறிப்பிட்ட பார்க்கிங் ஸ்பாட்டில் வேறு யாரும் காரை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக 'முன் ஜாக்கிரதை முத்தண்ணியாக' அவனது தாய் அங்கே தனது குழந்தையை உட்கார வைத்து 'ரிசர்வ்' செய்துவிட்டு சென்றிருந்தவள் சுமார் 20 நிமிடங்கள் கழித்து வர சம்பவம் சுபம் என்றாலும் ஒரு பார்க்கிங் ஸ்பாட்டுக்காக தனது குழந்தையின் உயிரோடும் எதிர்காலத்தோடும் முட்டாள்தனமாக விளையாடிய இவளை என்னவென்று சொல்வது?

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்!!

    சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

    இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

    நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.