அதிரை நியூஸ்:
துபாய், செப்-25
கிருஸ்தவ நாட்காட்டியின் அடிப்படையில் அமீரக பொது விடுமுறை தினங்கள் பெரும்பாலும் வெள்ளி, சனி வார விடுமுறை நாட்களை உடையவர்களுக்கு நீண்ட தொடர் விடுமுறை நாட்களை வழங்கி வருகின்றன.
மேற்படி கிருஸ்தவ நாட்காட்டி எனப்படும் ஆங்கில நாட்காட்டியின்படி கீழ்க்காணும் தினங்கள் 2016 வருடத்தின் எஞ்சிய பொது விடுமுறை தினங்களாக அமையவுள்ளன.
அக்டோபர் 2 - இஸ்லாமிய ஹிஜ்ரி புத்தாண்டு தினம்
அக். 29 வியாழன் மாலை முதல் துவங்கும் விடுமுறை மனநிலை 03 நவம்பர் அன்று 3 நாள் விடுமுறைக்குப் பின் வேலைக்குத் திரும்பும் போது தான் சோம்பலுடன் எதிர்கொள்ளும்.
குறிப்பு: பிறை பார்த்தலின் அடிப்படையில் ஹிஜ்ரி புத்தாண்டு தினம் மாறக்கூடும்.
நவம்பர் 30 தியாகிகள் தினம் மற்றும் டிசம்பர் 02 அமீரக தேசிய தினம்
கடந்த வருடம் இரண்டையும் இணைத்து தொடர் விடுமுறையாக அளிக்கப்பட்டது. அதாவது நவம்பர் 30 தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டாலும் டிசம்பர் 1 ஆம் தேதி அன்றே தேசிய தினத்துடன் இணைத்து பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அதுபோல் இந்த வருடமும் நிகழலாம்.
இந்த வருட தேசிய தினம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓரிரு நாள் சேர்த்து விடுமுறை கிடைக்கலாம்.
பொருத்திருந்து பார்ப்போம், கூட்டி கழிச்சி கணக்கு சரியாகவும் வரலாம்.
டிசம்பர் 12 மீலாது நாள்
டிச. 12 ஆம் தேதி திங்கட்கிழமை ஆதலால் லீவு மட்டும் ஞாயிறுக்கு மாற்றப்பட்டு வெள்ளி முதல் ஞாயிறு வரை தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
குறிப்பு: பிறை பார்த்தலின் அடிப்படையில் மேற்படி தினம் மாறக்கூடும்.
அந்த நாள் ஞாபகம்:
சவுதியில் அனைத்திற்கும் ஹிஜ்ரி காலண்டர் அடிப்படையே பின்பற்றப்படுகிறது ஆனால் சம்பளம் தருவதற்கு மட்டும் கிருஸ்தவ காலண்டர் பின்பற்றப்படுகிறது என்று சகலரும் பொருமிய நாட்கள். வருடத்திற்கு சுமார் 11 நாட்கள் மிச்சப்படுகிறதாம் சம்பளம் தருபவர்களுக்கு.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.