.

Pages

Monday, September 26, 2016

ராஸ் அல் கைமாவில் சொகுசு கப்பல் எரிந்து சாம்பல் !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-26
ராஸ் அல் கைமாவின் 'அல் ஹம்ரா மரீனா'வில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான இந்த 35 மீட்டர் நீள 14 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய சொகுசுப்படகு முற்றிலும் எரிந்து கடலுக்குள் முழ்கியது.

2000 ஆம் ஆண்டு துருக்கியால் கட்டப்பட்டு மூன் (Moon) என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த சொகுசுப் படகு மின்சாரக்கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நீச்சல்குளத்துடன் (Jacuzzi) உள்ள இந்த படகின் மேல் அடுக்கில் (Upper Deck) தீப்பற்றியதை தொடர்ந்து பிற படகுகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கப்பல்துறையிலிருந்து இழுவை படகு (Tug Boat)மூலம் அப்புறப்படுத்தப்பட்டது என்றாலும் தீயணைப்பு வீரார்களின் முயற்சி பலன் தராமல் படகு முழுமையாக எரிந்து கடலுக்குள் முழ்கியது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.