.

Pages

Saturday, September 24, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், செப்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையம் [ Career Guidance and Placement Cell ] நடத்தும் முதுகலை மற்றும் இளங்கலை கல்வி பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பெற திறனை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் செயல் விளக்க பயிற்சி முகாம் இன்று சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மதுரை மேக்னஸ் அகாடமி தலைமை பயிற்றுனர் ஜி. அருண் ஆனந்த் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு செயல் விளக்க பயிற்சி அளித்தார். இதில் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

முகாமில் கல்லூரி இளங்கலை, முதுகலை மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாட்டினை காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம் சார்பில் அதன் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர், ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.