ஷார்ஜா, செப்-24
ஷார்ஜாவில் டேக்ஸி டிரைவராக பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த நஸீபுல்லாஹ் ஷேர் என்பவர் தனது டேக்ஸியில் பயணம் செய்த கொரிய நாட்டு வியாபாரி தவறவிட்டுச் சென்ற 1.7 மில்லியன் திர்ஹம் மற்றும் முக்கியமான ஆவணங்களை உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் செயல்படும் ஷார்ஜா போக்குவரத்து துறை அலுவலகத்தில் சென்று ஒப்படைத்தார்.
ஷார்ஜா போக்குவரத்துத் துறை போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கொரிய வர்த்தகரிடம் அனைத்தையும் கொண்டு சேர்த்தது பின்பு டிரைவரின் நேர்மையை பாராட்டி ஷார்ஜா போக்குவரத்து துறையின் சார்பாக வெகுமதியுடன் நன்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஏன் இதை சொல்றோம்னா... நம்ம ஊர்ல போலிஸ்காரனுங்களே கூட்டு சேர்ந்து கோடிக்கணக்குல கொள்ளையடிக்கிற செய்தியை கேள்விப்படும் போது.... நீங்களே பில்லப் பண்ணிக்கோங்க!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அவர் அல்லாஹ்விற்க்கு பயந்தவர்.
ReplyDeleteஅவர் அல்லாஹ்விற்க்கு பயந்தவர்.
ReplyDelete