அதிரை நியூஸ்:
துபாய்: செப்-25
துபாய் போலீஸ் மறுத்த பிறகும் கார் ஒட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோரை மட்டும் படம் பிடிப்பதாக கூறும் ஸ்பெஷல் கேமரா பற்றிய வதந்தி ஓய்ந்தபாடில்லை.
இதுகுறித்து துபை போக்குவரத்து போலீஸ் டைரக்டர் பிரிகேடியர் சையிஃப் முஹைர் அல் மஜ்ரோஹி தெரிவித்திருப்பதாவது, துபையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து ரேடார் கேமிராக்கள் அனைத்தும் நவீன தொழிற்நுட்ப வசதிகளையுடையது. அதிகவேகம், பெல்ட் அணியாமல் செல்வது, இரு வாகனங்களுக்கிடையே குறிப்பிட்ட இடைவெளியை பேணாதிருப்பது மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவோரை படம்பிடிப்பது என அனைத்தை ஒருங்கே செய்யும் ஆல் இன் ஆல் (அழகு ராஜா) ரேடார் கேமரா என்பதால் மொபைல் போன் குற்றவாளிகளை பிடிக்கவென்று தனியாக எந்த கேமராவையும் பொருத்தும் அவசியமில்லை என்றும் சமூக தளங்களில் வரும் அந்த கேமரா படம் வேறு ஒரு வளைகுடா நாட்டில் பயன்பாட்டில் உள்ளதென்றும் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள செய்தியை முன்கூட்டியே அறிவிக்கும் பலகைகளும் ஒவ்வொரு ரேடார் கேமிரா பொருத்தப்பட்டுள்ள இடம் வரும் முன்பாகவே குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் நன்மை நாடியுமே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விளக்கினார்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.