அதிராம்பட்டினம், செப்-26
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக். 19 ல் நடைபெற உள்ளது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி பற்றிய விவரங்கள்:
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளை கொண்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ( SC ) 20-வது வார்டு, பெண்கள் ( பொது ) 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21 ஆகிய வார்டுகளும், ஆண்களுக்கு ( பொது ) 2, 3, 4, 5, 6, 8, 9, 12, 14, 18 ஆகிய வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி தலைவர் பதவி பெண் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் மொத்தம் 24,854 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,185, பெண் வாக்காளர்கள் 12,669 இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை வீட பெண் வாக்காளர்கள் 484 பேர் அதிகமாக உள்ளனர். அதிரை பேரூராட்சியின் 21 வார்டுகளுக்கும் 31 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இதுவரையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவர்களாக பதவி வகித்தவர்கள் பற்றிய விவரங்கள்:
எஸ்.எச் அஸ்லம் ( திமுக) ஆண்டு 2011-2016
எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் ( சுயேட்சை ) ஆண்டு 2006-2011
எம்.எம்.எஸ்.ஏ தாஹிரா அம்மாள் ( சுயேட்சை ) ஆண்டு 1996-2006
எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் ( காங்கிரஸ் )
எம்.எம்.எஸ் சேக்தாவூது மரைக்காயர் ( காங்கிரஸ் )
எஸ்.எம்.எஸ் அபுல்ஹசன் மரைக்காயர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.