எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிராம்பட்டினம் உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ( SC ) 20-வது வார்டு, பெண்கள் ( பொது ) 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் ( பொது ) வார்டுகள் 2, 3, 4, 5, 6, 8, 9, 12, 14, 18, பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெண் ஆவார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு விவரங்கள்:
SC(பெண்)வார்டு: 20
பொது பெண்கள் வார்டு: 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21
பொது ஆண்கள் வார்டு: 2, 3, 4, 5, 6, 8, 9, 12, 14, 18
பேரூராட்சி தலைவர்: பதவி பெண்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வல்லம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு முதல் வார்டு, பெண்களுக்கு 2, 8, 9, 10, 12, 13, 14 ஆகிய வார்டுகள். ஒரத்தநாடு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 15-வது வார்டு, பெண்களுக்கு 4, 5, 7, 10, 12, 13, 14 ஆகிய வார்டுகள். திருவையாறு பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 9-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 1, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 5, 10, 11, 12, 13 ஆகிய வார்டுகள்.
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ஆதிதிதிராவிடருக்கு 14-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 13-வது வார்டு, பெண்களுக்கு 2, 4, 5, 6, 7, 8, 11 ஆகிய வார்டுகள்.
மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு முதல் வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4, 5-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 7, 9, 12, 13, 15 ஆகிய வார்டுகள். பேராவூரணி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 11-வது வார்டு, பெண்களுக்கு 1, 3, 4, 5, 8, 10, 17, 18 ஆகிய வார்டுகள்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 20-வது வார்டு, பெண்களுக்கு 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21 ஆகிய வார்டுகள். மதுக்கூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 1, 4, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள். ஆடுதுறை பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 6-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 10-வது வார்டு, பெண்களுக்கு 2, 3, 4, 11, 13, 14, 15 ஆகிய வார்டுகள். திருபுவனம் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 6-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 12-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 3, 7, 10, 11, 15 ஆகிய வார்டுகள்.
திருவிடைமருதூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 7-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 2, 4, 5, 10, 12, 13, 15 ஆகிய வார்டுகள். திருநாகேசுவரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 7-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 6, 9, 10, 13, 14. ஆகிய வார்டுகள். திருப்பனந்தாள் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 2, 12-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 5, 7, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 1, 6, 8, 11, 13 ஆகிய வார்டுகள்.
வேப்பத்தூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 4, 7-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 1, 3, 14-வது வார்டுகள், பெண்களுக்கு 2, 6, 8, 9, 11 ஆகிய வார்டுகள். சோழபுரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 10-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 9, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 1, 3, 7, 8, 12, 13 ஆகிய வார்டுகள். சுவாமிமலை பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 3, 5, 6, 7, 10, 11, 14.
தாராசுரம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு, பெண்களுக்கு 4, 6, 8, 9, 12, 14, 15 ஆகிய வார்டுகள். பாபநாசம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 1, 5, 6, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகள்.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 4-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 3, 6, 8, 9, 10 வார்டுகள். மெலட்டூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 1, 3, 4-வது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 11, 12, 15-வது வார்டுகள், பெண்களுக்கு 6, 8, 10, 13, 14 வார்டுகள். அம்மாபேட்டை பேரூராட்சியில் ஆதிதிராவிடருக்கு 2-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 8-வது வார்டுகள், பெண்களுக்கு 3, 4, 5, 6, 11, 12, 13 வார்டுகள். இவற்றைத் தவிர 22 பேரூராட்சிகளிலும் மற்றவை பொது வார்டுகள்.
கும்பகோணம் நகராட்சியில்...
உள்ளாட்சித் தேர்தலில் கும்பகோணம் நகராட்சியில் பெண்களுக்கு 23 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் நகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில், ஆதிதிராவிடருக்கு 23-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்களுக்கு 27, 30-வது வார்டுகள். பெண்களுக்கு 2, 3, 4, 5, 8, 9, 21, 22, 26, 28, 31, 35, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45. மற்றவை பொது வார்டுகள்.
பட்டுக்கோட்டையில்...:
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஆதிதிராவிடருக்கு 29-வது வார்டு, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 33-வது வார்டு, பெண்களுக்கு 1, 2, 5, 7, 10, 11, 12, 14, 15, 17, 20, 21, 23, 24, 26, 32 ஆகிய வார்டுகள். மற்றவை பொதுவானவை.
அதிரைப் பேரூராட்சி வார்டுகளில் பெண்களுக்கான வார்டுகள் என்று ஒதுக்கீடு செய்ததில் உள்கருத்துடன் வேலைகள் நடந்துள்ளன! அரசு ஊழியர்கள் எங்கிருந்தோ வந்து இப்படி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது! உள்ளூர் வார்டு மக்களைக் கலக்காமல் இப்படித் தம்மிச்சையாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
ReplyDeleteபேரூராட்சித் தலைவருக்கும் ஒரு பெண்ணா? அதுவும் அதிரையிலா? உருப்பட்டாப் போலத்தான். ஏன், ஆண்களுக்கு வக்கில்லையா?
என்னங்கடா அரசியல் நடத்துகின்றீர்கள்?
முஸ்லிம்கள் அதிகமாகவாழும்பகுதிகளில்உள்நோக்கத்தோடு தலைவர் பதவிகளை பெண்களுக்குஒதுக்குவதும் ஒருவகை ஜனநாயகஉரிமைகளைதர மறுக்கும் செயல்தான்.
ReplyDelete- Ibrahim Ansari