.

Pages

Tuesday, September 27, 2016

ஒட்டகத்தை பொன் நகையால் அலங்கரித்த முட்டாள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்-27
அத்தர் மிஞ்சினா ... தடவனும் என்று பழமொழிய கேள்விபட்டிருப்பீங்க அந்த பழமொழியை வேறுவிதத்துல தடவிப்பார்த்த முட்டாள் ஒட்டக முதலாளி ஒருவன் தன்னுடைய பொன் நகை குவியலை ஒட்டகத்திற்கு சூட்டி, இன்றைய சர்வதேச வியாதியான சமூக வலைத்தளங்களில் பகிர, எதிர்பார்த்த 'காலணா பெறதா லைக்குகள்' கிடைப்பதற்கு பதில் வசவுகளை வாங்கி குவித்து வருகிறானாம்.

தன்னைச் சுற்றி எத்தனையோ தேவையுடைய ஏழைகள் உறவினர்களாக மற்றும் உறவினர் அல்லாதவர்கள் இருக்கலாம், ஒரு பக்கம் பெட்ரோல் விலை வீழ்ச்சியால் அலறும் சவுதி பொருளாதாரம் இன்னொரு பக்கம் ஒரு வாய் தண்ணீர் குடிக்கக்கூட வழியில்லாத சிரியா, லிபியா, பாலஸ்தீன், ஆப்கான், ஈராக் மற்றும் ஆப்பிரிக்க நாட்டு அகதிகள் என இந்த மிதமிஞ்சிய செல்வத்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையோர் என நிறைந்திருக்கையில் இந்த பகட்டு தேவையா?

Source: Gulf News

இது இப்படியிருக்க, ஓமன் நாட்டு ஏமாற்றுப்பேர்வழி ஒருவன் தன்னுடைய ரேஸ் ஒட்டகத்தை குறுக்குவழியில் வெற்றி பெற வைக்க முயற்சித்து பிடிபட, ஆளு இப்ப அமீரக ஜெயிலுக்குள்ளே.

பொதுவாக ஒட்டகங்கள் பயந்தால் வேகமாக ஓடும் தன்மையுடையவை, அதற்காகவே முன்பெல்லாம் இளம் சிறார்களை ஒட்டக முதுகில் கட்டி, அந்த சிறுவன் பயத்தால் அலற அலற ஒட்டகமும் பயந்து வேகம் பிடித்து ஓடும். தற்போது இளம் சிறார்களை ஒட்டக முதுகில் கட்டுவது தடை செய்யப்பட்டுவிட்டதால் 'ரோபோ ஜாக்கிகள்' பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இந்த ஓமானி அதுக்கும் மேலே, ஒட்டகத்திற்கு மின்சார அலைகளை பாய்ச்சி 'ஷாக்' தரும் சிறுபொறியை திருட்டுத்தனமாக இணைக்க, சோதனையில் பிடிபட்டு ஒட்டகமும் பறிமுதல் செய்யப்பட்டு ஆளும் உள்ளே.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.