.

Pages

Tuesday, September 20, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் வரவேற்பு விழா !

அதிராம்பட்டினம், செப்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவு இளங்கலை, முதுகலை, எம்.பில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. எம் உதுமான் முகையதீன் தலைமை  உரை நிகழ்த்தினார். பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, இ. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் அ.முகம்மது முகைதீன் ஊக்கமூட்டும் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு விழா பேருரை ஆற்றினார்.

தொடக்கத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி பி. நாகஜோதி வரவேற்றார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை இரண்டாம்  ஆண்டு மாணவர் சங்கரவடிவேலன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி இ. புவனேஸ்வரி நன்றி கூறினார்.

இவ்விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
  
 

1 comment:

  1. சர்வதேச அளவில் எங்கு பணியாற்றினாலும், இந்த கல்லூரியில் கற்றுக் கொண்ட ஒழுக்கம், கல்வி, கலாச்சாரம் போன்றவைகள் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களின் செயல்களையும் பொறுப்போடு கவனித்து சீர்படுத்தும் ஆசிரியர்கள் இக்கல்லூரியில் உள்ளனர். பெற்றோர் தரும் சுதந்திரத்தை, பொறுப்போடு மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற உறுதிமொழி எடுக்க வேண்டும். செய்வீர்களா ......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.