கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகள்/ தனிநபர் தொழில் முனைவோர் / சுயஉதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். கோழிப் பண்ணை அமைக்க போதிய நிலம், விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
விவசாயிகள் ஃ தனிநபர் தொழில் முனைவோர் / சுயஉதவிக்குழுக்கள் ஆகியோர் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப் பண்ணை அமைக்கலாம்.
நாட்டுக்கோழிப்பண்ணை 250/500 வரை அமைப்பதற்கான கோழிக்கொட்டகை கட்டும்; பணி, உபகரணங்கள், கோழித்தீவனம், கோழிக்குஞ்சுகள் வாங்குதல், அசோலா உற்பத்தி போன்றவை அமைக்க ஆகும் மொத்த செலவில், 25 சதவீதம் முன் மானியம் தமிழக அரசு வழங்குகின்றது. இதைத்தவிர, கோழி வளர்ப்பதற்கான தீவனச் செலவினை குறைப்பதற்கு 10 பயனாளிகள் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றுக்கு தலா ஒரு “தீவன அரவை இயந்திரம்” தமிழக அரசு வழங்க உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சான்றுகளுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை தஞ்சாவூர் அவர்களிடம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
தகுதி சான்றிதழ் வாங்க அரசு அதிகாரிகளுக்கு அதிகமாக பணம் செலவழிப்பதால் அரசு மானியம் 25 சதவிகிதம் பற்றாது அதிகபட்சமாக 50 சதவீதம் கொடுத்தால் பயனாளிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா ஆட்சியில் நடக்கலாம்.
ReplyDelete