.

Pages

Tuesday, September 20, 2016

துபாய் அல் ஜாஃபிலியா மெட்ரோ அருகில் புதிய மாநகராட்சி சேவை மையம் திறப்பு

அதிரை நியூஸ்:
துபாய், செப்-20
அல் ஜாபிலியா மெட்ரோ அருகிலுள்ள அல் கிபாஃப் (Al Kifaf) பகுதியில் துபை மாநகராட்சியின் புதிய சேவை மையம் திறக்கப்பட்டது. ஏற்கனவே 1975 ஆம் ஆண்டு முதல் கராமாவில் செயல்பட்டு வந்த சேவை மையம் மூடப்பட்டது.

அல் ஜபீல் பார்க் கேட் எண் 1 அருகே அமைந்துள்ள இந்த சேவை மையத்தில் துபை அரசு தொடர்புடைய சேவைகள் மட்டுமல்லாது அமீரக மத்திய அரசு தொடர்புடைய சேவைகளும் (Federal Services) விரைவில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமை கட்டிடத் தரத்தில் (Green Building Standard), சுமார் 60,000 சதுர மீட்டர் சுற்றளவில் 24 மில்லியன் திர்ஹம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த இரண்டடுக்கு கட்டிடத்தைச் சுற்றி சுமார் 350 கார்களை நிறுத்த முடியும்.

காலை 7.30 மணிமுதல் பகல் 2.30 வரை இயங்கும் இந்த புதிய அலுவலகத்தில், முன்பு கராமா மையத்தில் இயங்கிய 23 கவுண்டர்களுக்கு பதிலாக விரைவான சேவை வழங்கும் நோக்குடன் இங்கு 71 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்மார்ட் துபை திட்டத்தின்படி 24 மணிநேரமும் இயங்கும் தானியங்கி சேவை இயந்திரங்களும் (Kiosk) விரைவில் நிறுவப்படவுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் எளிதாக உள் பிரவேசிக்க தேவையான சிறப்பு வசதி, வீல்சேர் வசதி மற்றும் சிறப்பு டோக்கனுடன் கவுண்டர்கள் என மாற்றுத் திறனாளிகள், கர்ப்ப ஸ்திரிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

மேலும் அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்கள் போர்த்திக் கொள்ள 'இலவச அபயா' சேவையும் வழங்கப்படுவதுடன் வைஃபை வசதி, இருபாலருக்கும் தொழுகை கூடங்கள், குழந்தை பராமரிப்பு அறை இவற்றுடன் மொபைல் ஆப்பை பயன்படுத்தி முன் கூட்டியே அப்பாயிண்ட் வாங்கும் வசதிகள் என அசர வைத்துள்ளனர்.

ஆரம்பமாக, தற்போது வழங்கப்படும் சேவைகள்:
1. கட்டிடங்கள் தர ஆய்வு (Building Inspection Unit)
2. உணவு கட்டுப்பாடு (Food Control)
3. கழிவு மேலாண்மை (Waste Management)
4. பொது பூங்காக்கள் (Public Parks Memberships)
5. நிதி சார் சேவைகள் (Financial Services)
6. மாநகராட்சி சார்பான ஏடுகள் மற்றும் நினைவு சின்னங்கள் (Municipality Books & Memorabilia)
7. வியாபார அனுமதி லைசென்ஸ்கள் (Trade Registration)
8. சீசன் பார்க்கிங் கார்டுகள் (RTA Seasonal Parking Cards)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.