.

Pages

Saturday, September 24, 2016

சிஎம்பி லேன் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் மாற்றி அமைப்பு !

அதிராம்பட்டினம், செப்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து கீழே சாய்ந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து இப்பகுதி கவுன்சிலர் முகமது இபுராகிமிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு அதன் அருகில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் 6 பேர் பணியாற்றினர். இதன் பணிகளை இப்பகுதி கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நேரில் பார்வையிட்டு இவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து செய்து கொடுத்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சிஎம்பி லேன் இஸ்மாயில் பெட்டிக்கடை அருகில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிரை மின்சார வாரியம் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன். மேலும் அதிரை பேரூராட்சி உதவி இயக்குனர் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வந்தேன். இந்நிலையில் இன்று பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.  அதிரை மின்வாரிய ஊழியர்கள் 6 பேர் பணியாற்றினார்கள். இவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து செய்து கொடுத்தேன். எங்கள் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மின்சார வாரியத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.