.

Pages

Friday, September 23, 2016

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிரை பேரூர் திமுகவினர் விருப்ப மனு ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், செப்-21
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று மாலை தஞ்சை அறிவாலயத்தில் திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரனிடம் அதிரை பேரூர் திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் முன்னிலையில் அன்சர்கான், முஹம்மது சரீப், முஹம்மது இப்ராஹீம், செய்யது முஹம்மது, பசூல்கான், முத்துராமன், சுப்ரமணியன், தாரிக் அஹமது, சுஹைப்தீன், அப்துல் அஜீஸ், தீன்நிஷா, சந்திரா, அபிராம செல்வி ஆகியோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.