.

Pages

Tuesday, September 27, 2016

கொரியாவில் உயரமான கட்டிடத்திலிருந்து கணவனின் உணவை வீசிய மனைவி !

அதிரை நியூஸ்: செப்-27
உலகில் எத்தனையோ விந்தையான நிகழ்வுகள் நித்தமும் நடந்து வருகின்றன, அந்த செய்திகளில் நமக்கு எத்தகைய பிரயோஜனமும் இல்லாவிட்டாலும் கூட படிக்கும் போது ஒரு மெல்லிய சுவாரசியம் மின்னி மறைவதை நமது உள்ளங்கள் மறைக்காது.

தென் கொரியாவில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் கணவன் தனது உணவை (லஞ்ச் பாக்ஸ்) மறந்து செல்ல பதட்டமடைந்த அவரின் பாசமான மனைவி அவர்கள் தங்கியிருந்த உயரமான அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திலிருந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கணவரின் காரின் மேற்கூரையை (Sun Roof) நோக்கி வீசி எறிய, லஞ்ச் பாக்ஸ் சமர்த்தாக இருக்கையில் விழ, கணவர் முகம் நிறைந்த புன்னகையுடன் மனைவிக்கு 'தம்ஸ் அப்' கூறி சென்ற கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக 'றெக்க' கட்டி பறக்கிறதாம்.

இதை படித்தவுடன், திருவள்ளுவர் தனது மனைவி வாசுகியை அழைத்தபோது கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை அப்படியே விட்டுவிட்டு கணவரின் கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்த்து ஓடிவந்ததால் 'அந்த வாளி' அப்படியே அந்தரத்தில் நின்றதாக நமக்கு சிறுவயதில் சொல்லித்தரப்பட்ட கதை நினைவுக்குள்ளே வந்து போனது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.