.

Pages

Tuesday, September 27, 2016

துபாய் மம்ஸர் முதல் பர்துபாய் வரை பஸ் மற்றும் டேக்ஸிகளுக்கான பிரத்தியேக சாலை !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-27
இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்டமாக, துபை மம்ஸரிலிருந்து அல் குபைபா (பர்துபை) வரையிலான சாலையில் அரசு பஸ், டேக்ஸிக்கள் மற்றும் அரசு வாகனங்கள் மட்டும் இயக்கப்படும் பிரத்தியேக சாலை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்த சாலையை மீறி பயன்படுத்துவோர் 600 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும் என்றாலும் அக்டோபர் 30 வரை ஓட்டுனர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் எச்சரிக்கை மட்டுமே செய்யப்படுவர்.

இதற்கு முன் முதற்கட்டமாக, தேரா நாயிஃப் சாலையில் மீன் மார்க்கெட் வரை 2015 ஏப்ரல் முதல் இதுபோன்ற சிறப்பு சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டு வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த இரண்டாம் கட்ட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. மேலும் நாயிஃப் சாலையில் 7 தானியங்கி கேமராக்களும், ரோந்து போலீஸாரும் மீறும் வாகன ஓட்டுனர்களை கண்காணித்து பிடித்து வந்தனர்.

அரசு பஸ், டேக்ஸிக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் சாலையில் போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் சேவையில் உள்ள ஆம்புலன்ஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றாலும் மற்ற வாகனங்கள் திருப்பங்கள், வெளியேறுதல், பயணிகளை ஏற்றி இறக்குவது போன்ற தேவைகளின் போது மட்டுமே இந்த சாலைகளை பயன்படுத்தலாம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.