தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி, வேட்பு மனுக்கள் பெறுவது கடந்த ( 26-09-2016 ) அன்று முதல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். பிரதான அரசியல் கட்சிகள் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளிப்பதில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அதிரை பேரூராட்சி 18 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேல நெயக்காரத் தெருவை சேர்ந்த அஹமது பஷிருல்லா மகன் நூர் முஹம்மது ( வயது 47 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.
அதேபோல், அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் போட்டியிட சுயேட்சையாக விருப்பம் தெரிவித்து அதிராம்பட்டினம், மேலநெயக்காரத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகள் சிராஜுநிஷா ( வயது 22 ) அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.
15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ??
ReplyDeleteit's amended, thanks
Delete15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ?
ReplyDeleteIt's amended, thanks
Delete15 வது வார்டு பெண் வேட்பாளர் அல்லவா ?
ReplyDeleteபிழை திருத்தம் செய்யபட்டுள்ளது... (அதிரை நியூஸ்)
ReplyDelete