.

Pages

Wednesday, September 21, 2016

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் விரும்பிய இருக்கையை முன்பதிவு செய்ய இனி துட்டு!

அதிரை நியூஸ்:
துபாய், செப்-21
எதிர்வரும் 2016 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் எகனாமி வகுப்பில் சிறப்பு சேமிப்பு கட்டண டிக்கெட்டில் பயணிப்போர் (The charge is only applicable on Special and Saver fares in Economy Class) விரும்பும் இருக்கையை முன்பதிவு செய்து கொள்ள டிக்கெட் தொகைக்கு மேல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் விமானம் பறக்கும் தூரம் மற்றும் நேரத்திற்கேற்றவாறு கூடக்குறைய அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்திலிருந்து 2 வயது குழந்தைகளும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய முன்பதிவு செய்த சக பயணிகளுக்கும் விலக்களிப்படுகிறது (Children below the age of 2 and accompanying passengers on the same booking will be exempted from the fee).

மேலும் இந்த சிறப்பு இருக்கை பதிவிற்கான கட்டணம் ஆன்லைன் செக்கின் துவங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மட்டுமே வசூலிக்கப்படும். ஆன்லைன் செக்கின் துவங்கிய நிமிடத்திலிருந்து இலவசமாகவே விரும்பிய இருக்கையை தேர்வு செய்து கொள்ளலாம்.

இருக்கை தேர்வுக்கான கட்டண விபரம்:
1. வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகள் - 50 திர்ஹம்.
2. ஐரோப்பியா நாடுகள், தூர கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா – 100 திர்ஹம்.
3. வட, தென் அமெரிக்கா நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து – 150 திர்ஹம்.
4. வெளிநாட்டிலிருந்து இன்னொரு வெளிநாட்டிற்கு இயக்கப்படும், உதாரணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து மெல்போர்ன், நியூயார்க்கிலிருந்து மிலன் போன்ற தடங்களில் இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானங்களில் தூரத்திற்கு ஏற்றவாறு 50 முதல் 100 திர்ஹம் வரை வசூலிக்கப்படும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.