.

Pages

Monday, September 19, 2016

நினைவூட்டல்: கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30-09-2016 க்குள் கல்வி நிலையங்களில் சமர்பிக்க அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ-மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியான www.scholarships.gov.in என்பதில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு 30-09-2016 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு 2279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2016-17ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு:
1, மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
2, பெற்றோர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
3, ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவ-மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பதை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ். வருவாய்த்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய சான்றோப்பம். கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது. இருப்பிட முகவரி. வங்கிக் கணக்கு எண் ( Core Bank Service Account Number, IFS Code ) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 30-09-2016 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் வேண்டும், சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.