.

Pages

Monday, September 19, 2016

அதிரை பேரூந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை: அதிகாரிகள் முன்னிலையில் அறிவிப்பு பலகைகள் வைப்பு !

அதிராம்பட்டினம், செப்-19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து இரண்டு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலைய தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கடந்த 30-09-2015 அன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவரது மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுந்தர், நீதிபதி வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரை பேருந்து நிலையத்தின் வாகன ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு கடந்த 13-10-2015 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி 22ந்தேதி, அப்போது பொறுப்பில் இருந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன், வட்டாட்சியர் சேதுராமன், வட்டார போக்குவரத்துதுறை அலுவலர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன், பேராவூரணி காவல் நிலைய ஆய்வாளர், மதுக்கூர் காவல் நிலைய ஆய்வாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நீலாவதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் அதிரை பேரூந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.

இந்நிலையில் இன்று காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த்மேனன், பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் முன்னிலையில் அதிராம்பட்டினம் போலீசார் பாதுகாப்புடன் அதிரை பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து பேருந்து நிலையப் பகுதிகளில் இரண்டு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும், ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறை மூலம் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கான அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 

1 comment:

  1. பயணிகளின் வசதிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டது அது பயனுள்ளதாக இல்லை காரணம் பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை அதற்க்கான நடவடிக்கை இல்லாததால் மினி வேன்களின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருக்கு. போர்டு வைத்தால் மட்டும் போதாது பேருந்து உள்ளே வந்து செல்ல வேண்டும் அப்படி இருந்தால் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையில் அருத்தம் உண்டு., வழக்கமான மாமூல் பாதிப்பதாக கருதி வந்த அதிகாரிகளில் சிலர் சீக்கிரமாக இடத்தை விட்டு நகர்ந்தார்கள். கோர்ட்டு குட்டு வைத்தால் அதிகாரிகளின் நடவடிக்கை ஆரம்பம் இல்லையேல்...... சபாஷ்! நகரத்தலைவரே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.