அதிராம்பட்டினம், செப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் (ஈசிஆர் சாலை) 10 அடி அகலத்திலுள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள நீர் நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 66 பேர் வீடு, கடைகள் கட்டியுள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை செப். 27-ம் தேதி அகற்றுமாறு பட்டுக்கோட்டை வருவாய்த்துறைக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில் செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையில் வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கல்லணைக் கால்வாய்) செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தர்மேந்திரா, ராஜகுமாரி,
நில அளவையர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர்.
அப்போது நீர்நிலை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்களும், பொதுமக்களும் திரண்டு அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை அளந்து குறியீடு செய்து, கால அவகாசம் தாருங்கள். நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என வாதிட்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தின் மீது அடையாள குறியீடு செய்யப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள 66 பேரும் விரைவில் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.