.

Pages

Tuesday, September 20, 2016

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சியளிப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சிகள் உள்ளாட்சி தேர்தல் 2016, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (20.09.2016) பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2016ல் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28 பதவிகளும், 14 வட்டாரங்களிலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  276 பதவிகளுக்கும், 589 சிற்றுராட்சியில், சிற்றுராட்சி தலைவர் பதவிகளுக்கும், 589 சிற்றுராட்சியில் 4569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் கட்சி அடிப்படையில் அல்லாத தேர்தல்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவியும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும்

கட்சி அடிப்படையிலான தேர்தல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியும் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இருக்க வேண்டும்.  21வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  குறிப்பிட்ட பதவியின் இட ஒதுக்கீட்டின்படி உரியவர்.  ஒரு வேட்பாளர் ஒரு பதவிக்கு மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.