.

Pages

Wednesday, September 21, 2016

ஹஜ்ஜில் 20 வருடத்திற்குப் பின் சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்-21
இந்த வருட ஹஜ் எத்தனையோ வகையில் இம்மை மறுமைக்கான நன்மையாகவும் அமைதியாகவும் நிறைவடைந்திருக்கும் நிலையில் மன்னர் சல்மான் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த வருட ஹஜ் கடமையை நிறைவேற்றிய பாலஸ்தீனியர்களுக்கும் மறக்க இயலா ஹஜ் பயணமாக திகழ்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் 5 வருடங்களுக்குப் பின் ஹஜ்ஜில் இணைந்த தாயையும் மகனையும் பற்றி வெளியான செய்தியை பகிர்ந்திருந்தோம். இந்நிலையில் 20 வருடத்திற்குப் பின் மதினாவில் சந்தித்துக் கொண்ட மேலும் 2 பாலஸ்தீன மூத்த சகோதரர்கள் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த வருட ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வந்த காசாவை சேர்ந்த 65 வயதுடைய தஹ்சீன் முஹமது அல்வதியா என்பவர், 20 வருடங்களுக்கு முன் சவுதி வந்த நிலையில் மேற்கொண்டு பயணிக்கவோ, பாலஸ்தீனம் திரும்பவோ முறையான ஆவணங்கள் இல்லாமல் சவுதியிலேயே தங்கிவிட்ட தனது சகோதரன், அவரது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை மதினமாநகரில், அவர் கனவிலும் எதிர்பார்த்திராத குடும்ப சங்கமத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவுகளுடன் தன் தாய் மண்ணான பாலஸ்தீனுக்குத் திரும்பினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.