.

Pages

Thursday, September 22, 2016

புஹாரி ஷரீப் மஜ்லீஸில் கேரளா மாநில முன்னாள் அமைச்சர் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், செப். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 02-09-2016 [ 1437-துல்கஅதா பிறை 29 ] அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற புகாரி சரீப் மஜ்லீஸில் கேரளா மாநில முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர், காசர்கோடு சட்டமன்ற உறுப்பினர் வி.கே. இப்ராஹீம் குஞ்சு எம்.எல்.ஏ வருகை தந்து கலந்துகொண்டார்.

தொடக்கத்தில் கேரளா மாநில முன்னாள் அமைச்சரை ஜாவியா நிர்வாகக் கமிட்டி மற்றும் அதிரை பேரூர் முஸ்லீம் லீக் கட்சியினர் வரவேற்றனர்.

வருகை குறித்து முன்னாள் அமைச்சர் வி.கே. இப்ராஹீம் குஞ்சு எம்.எல்.ஏ கூறுகையில்...
'பல ஆண்டுகளாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புனித மிக்க மஜ்லிசில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மஜ்லீஸால் இந்த ஊர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மிகுந்த சிறப்பை பெரும். இந்த மஜ்லீஸில் நான் தொடர்ந்து கலந்து கொள்ள இறைவன் நல்லருள் புரிய வேண்டும். இந்த மஜ்லிசை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும்  புகாரி சரீப் நிர்வாகக் கமிட்டிக்கும், சிறந்த சொற்பொழிவுகளை வழங்கிவரும் ஆலிம் பெருமக்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த ஊர் பொதுமக்களுக்கும் இறைவன் ரஹ்மத்தையும், பரக்கத்தையும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.