அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மும்முரமாக அளித்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் 11 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: ஆரீபா
கணவர் பெயர்: M.F சாகுல் ஹமீது
வயது: 37
படிப்பு: உயர் நிலை
தொழில்: குடும்ப பராமரிப்பு
போட்டியிடும் கட்சி: அதிமுக
சேவை அனுபவம்: அதிரை லயன்ஸ் சங்க பொருளாளர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் ( கணவர் )
அரசியல் அனுபவம்: புதியவர்
போட்டி வேட்பாளர்கள்: உம்மல் மர்ஜான் ( திமுக ), ஹபீப் நாச்சியா ( மஜக )
வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. சுகாதார கழிப்பறை வளாகம் அமைத்தல்
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.
செடி நட்டு அதை மரமாக்கும் பசுமை திட்ட வாக்குறுதி இல்லையா?
ReplyDelete