.

Pages

Saturday, October 1, 2016

அதிரை பேரூராட்சி 18 வது வார்டு திமுக வேட்பாளர் அறிமுகம் !

அதிராம்பட்டினம், அக்-01
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி இதுவரையில் 33 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர்.

திமுக சார்பில்  18 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: முகமது சேக்தாவூது
தகப்பனார் பெயர்: நெய்னா முகமது
வயது: 41
படிப்பு: B.Com.,
தொழில்: பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் 'பிளாட்டினம்' எலக்ட்ரிக்கல் & பிளம்பிங் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
போட்டியிடும் கட்சி: திமுக
சேவை அனுபவம்: சமூக ஆர்வலர்
அரசியல் அனுபவம்: புதியவர்
போட்டியாளர்கள்: அப்துல் ரஹ்மான் ( அதிமுக ), நூர் முஹம்மது ( சுயேட்சை)

வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
5. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
6. மரக்கன்றுகள் நடப்படும்
7. மாதினுள் ஹசனத்தில் இஸ்லாமிய சங்கம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கப்படும்.

5 comments:

  1. பொதுநலத்தொண்டில் அக்கறையுள்ளவர்கள் இதுவரை வேட்புமனு அளித்ததாக தெரியவில்லை. அரசியல் நமக்கு ஒத்துவராது என்று நினைத்து விட்டார்களா? பண்டிகைக்காலங்களில் அதிரடி சலுகைகள் அறிவிப்பதுப்போல் போட்டியிடும் வேட்பாளர்களும் அள்ளிவீசுகிறார்கள். இனி மரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    ReplyDelete
  2. மரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    ReplyDelete
  3. மரம் நடுவதை விட யாரோ நட்டமரத்துக்கு தண்ணீர் விட்ட சமூக சேவகன் தான் தேவை அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! அருமையான குணம் படைத்தவர்!ஜெய்தபின் சிலரை பார்க்கவே முடியாது ஆனால் இவரை பார்க்க முடியும்!(பார்க்-வே-ஐஸ்கிரீம் சாப் இருக்கா)?

    ReplyDelete
  5. மரம் நாடுவதாய் இருந்தால் வேப்பமரம் நடுங்கள்!அதன் காற்று சுவாசத்துக்கு நல்லது !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.