தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 86 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிரை பேரூர் செயலர் பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், துணைச் செயலர் முஹம்மது தமீம், சிவக்குமார், உதயகுமார், ஹாஜா பகுருதீன், நஜ்முதீன், அஹமது ஹாஜா, அப்துல் ரஹ்மான் உள்ளிட 21 பேர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை அளித்தனர்.
ஜெயிப்பவர் யாராக இருந்தா
ReplyDeleteலும் தங்கள் பொறுப்பை
உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஜெயிப்பவர் யாராக இருந்தா
ReplyDeleteலும் தங்கள் பொறுப்பை
உணர்ந்து செயல்பட வேண்டும்.