தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமம், பதிவு பெறாமல் உணவு பொருள்களைத் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டாம் என உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உணவு பாதுகாப்புப் பிரிவு மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்கள், மளிகைக் கடைகள், இனிப்பகங்கள், இறைச்சிக் கடைகள், விநியோகிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், உணவு பொருள்களைச் சேமித்து வைப்பவர்கள், உணவுப் பொருள்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் உணவு வணிகர்கள் அனைவரும் உரிமம், பதிவுகளை எடுப்பதற்கான காலக்கெடு ஆக. 4-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில், உணவு உரிமம், பதிவுகளைப் புதிதாக எடுக்கவும், புதுப்பித்தல் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியாக திருமண மண்டபங்களில் பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள், பேக்கரிகள், இனிப்பகங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம், பதிவு பெறாமல் உணவு பொருள்களைத் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டாம்.
உரிமம், பதிவு பெற மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் வளாகம், காந்திஜி சாலை, தஞ்சாவூர் என்ற முகவரியில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 276511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.